Breaking News LIVE: கொஞ்சம் அழுத்தம் கொடுத்ததும், யு டர்ன் போட்டுவிட்டார் நிதீஷ்குமார் - ராகுல் காந்தி பேச்சு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 30ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 620வது நாளாக தொடர்கிறது.
Breaking News LIVE: சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயக படுகொலை - ராகுல் காந்தி
சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: தேஜஸ்வியிடம் 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை..!
பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்சு யாதவிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அரசு வேலைக்கு லஞ்சமாக குறைந்த விலையில் நிலங்களை பெற்றதாக பதிவான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது.
Tirupathi : திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி
#WATCH | Tirupati, Andhra Pradesh: Former Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami and BJP MP K Laxman visited Tirumala Temple earlier today pic.twitter.com/IuYM2DXzpp
— ANI (@ANI) January 30, 2024
நேர்மையான அரசைத் தேர்ந்தெடுங்கள். வாக்களியுங்கள் - பாஜக எம்.பி கெளதம் கம்பீர்
VIDEO | “I advised youth to cast their votes as well as inspire others to vote as well. If one doesn’t vote, they will have no way to blame the government for anything. Voting is their biggest right and they should choose an honest government,” says BJP MP @GautamGambhir after… pic.twitter.com/x3ydmE65eL
— Press Trust of India (@PTI_News) January 30, 2024
Ungalai Thedi Ungal Ooril : TN Scheme : உங்களைத் தேடி உங்கள் ஊரில் : தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதுத் திட்டம்
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ : அமலுக்கு வரும் புது திட்டம்.. களமிறங்கும் மாவட்ட ஆட்சியர்கள்.. அடடே.!#UngalaiThediUngalooril #TNSchemehttps://t.co/Rmk9j51tVm
— ABP Nadu (@abpnadu) January 30, 2024