Breaking News LIVE: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 28ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 618வது நாளாக தொடர்கிறது.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் விலை வைத்து டிக்கெட் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பின செயலர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன்! 48 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலி வீரர் சாம்பியன்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்த இத்தாலி வீரர் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் 9வது முறையாக பதவியேற்பு
பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் 9வது முறையாக பதவியேற்றார்.
கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது - கே.எஸ்.அழகிரி பேட்டி
மக்களவைத் தேர்தல் பங்கீடு குறித்து தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல்: கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க. - காங்கிரஸ் பேச்சுவார்த்தை
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.