Breaking News LIVE: தாம்பரம் கிளாம்பாக்கம் இடையே நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழ்நாடு அரசு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
சென்னையில் இன்று (ஜனவரி 24ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 613வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 88வது ஆட்டத்தில் ஜனவரி 24ம் தேதியான இன்று ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 09:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
கடந்த போட்டியில் இரு அணிகளும் எப்படி..?
கடந்த ஜனவரி 22 ம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்குப் பிறகு தெலுங்கு டைட்டன்ஸ் இந்தப் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று களமிறங்குகிறது. அந்த ஆட்டத்தில் 30-37 என்ற கணக்கில் தோல்வியடைந்தது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் 13வது தோல்வி இதுவாகும்.
மறுபுறம், ஜனவரி 21ம் தேதி தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை சந்தித்தது. இதில், தமிழ் தலைவாஸ் அணி 45-28 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு:
ரூபாய் 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்கிறார். இதையொட்டி, அரங்கில் உள்ள வசதிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்ச்சமுதாயத்தின் முக்கிய பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் விழா கொண்டாடப்படும் வேளையில் தமிழ்நாடு முழுவதிலும் காளையை இளைஞர்கள் அடக்கும் வீரத்தைப் புலப்படுத்தும் ஏறுதழுவுதல் விழா நடைபெறும்.
தாம்பரம் கிளாம்பாக்கம் இடையே நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழ்நாடு அரசு
தாம்பரம் கிளாம்பாக்கம் இடையே நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Breaking News LIVE: நினைவிடத்தில் விஜயகாந்த் உருவப்படம் திறப்பு
கோயம்பேட்டில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது உருவப்படத்தை தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கண்ணீர் மல்க திறந்து வைத்தார்.
Breaking News LIVE: காந்தி குறித்து ஆளுநர் சர்ச்சை பேச்சு; காங்கிர்ஸ் முற்றுகை போராட்டம்
காந்தியால் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்றும் சுபாஸ் சந்திரபோஸால் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்றும் ஆளுநர் ரவி பேசியதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரும் 27ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
Breaking News LIVE: கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்குவோம் - ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திட்டவட்டம்; குழப்பத்தில் பயணிகள்
கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தடவிட்டிருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை எனவும், எனவே கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Breaking News LIVE: கார் விபத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காயம்
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கார் விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.