மேலும் அறிய
Breaking News LIVE 26th OCT 2024: எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய், தவெக தலைவர்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- மதுரையில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் – வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி
- மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நோய்த்தொற்று உண்டாகும் அபாயம்
- மதுரையில் பெய்த கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள், குடியிருப்புகள்
- மதுரையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
- மதுரையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
- மதுரையில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் ஆய்வு
- மதுரையில் 70 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதம் அதிக மழைப்பொழிவு – இந்த மாதம் மட்டும் 100 மி.மீட்டர் வரை பதிவு
- கனமழை காரணமாக தேனி மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை; மதுரை கிழக்கு. மதுரை வடக்கு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை
- தமிழ்நாட்டில் இன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி; ஒகேனக்கலில் 35 ஆயிரம் கன அடி நீர்வரத்து
- திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை – அதிகாரிகள் தொடர் ஆய்வு
- முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் உயர்வு; ரூபாய் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
- நாள் முழுதாலும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடம் எதுவும் மிஞ்சவில்லை – சலூன்கடைகாரரிடம் உரையாடும் ராகுல்காந்தி வீடியோ
- காற்று மாசு அதிகரிப்பதால் பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
- திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பாபா சித்திக் கொலை வழக்கு; பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய 7 பேர் கைது
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
- மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட டாணா புயல் ; 2 பேர் உயிரிழப்பு – பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க உத்தரவு
- நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தடுமாறும் இந்தியா – இரண்டாவது இன்னிங்சிலும் அசத்தும் நியூசிலாந்து
21:08 PM (IST) • 26 Oct 2024
"ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல வேண்டாம்"
"ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல வேண்டாம்" என்பதை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் மாம்பலம் ரயில் நிலைத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது ரயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு ஆணையர் ராஜய்யா, மாம்பலம் ஆர்பிஎப் ஆய்வாளர் பர்ஷா பர்வீன் உள்ளிட்டோர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
20:28 PM (IST) • 26 Oct 2024
மதுரை மாட்டுத்தாவணி, புதூர், தல்லாகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது
மதுரை மாட்டுத்தாவணி, புதூர், தல்லாகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















