Indian 2: இந்தியன் 2-ல் வித்தியாசமான விவேக்கை பார்க்கலாம் - நடிகர் பாபி சிம்ஹா...
இந்தியன் 2 திரைப்படத்தில் வித்தியாசமான விவேக்கை பார்க்கலாம் என இந்தியன் 2 திரைப்படத்தின் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்துள்ள தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியன் 2 திரைப்படத்தில் வித்தியாசமான விவேக்கை பார்க்கலாம் என இந்தியன் 2 திரைப்படத்தின் நடிகர் கொடுத்துள்ள தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகின்றார். புது உத்வேகம் பெற்ற கமல் பல படங்களில் நடித்தும், பல படங்களை தயாரித்தும் வருகின்றார்.
அந்த வகையில் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கிய கமல் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2018- ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தான் இந்தியன் 2 . இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் என்பதால், இந்தியன் 2 படத்தை கமல் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்துள்ளனர். குறிப்பாக மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிக்கின்றார் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது.
ஆனால் விவேக், எதிர்பாராத விதமாக கடந்த 2021 -ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். எனவே இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா இல்லை அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்கவைப்பார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என ஷங்கரிடம் கூறியுள்ளாராம். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
இந்தியன் 2 படத்தில் விவேக்கின் காட்சிகள் அனைத்தும் இடம்பெறும் என்றும், இப்படத்தில் நாம் வித்யாசமான விவேக்கை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் பாபி சிம்ஹா. விவேக்கின் காட்சிகள் இடம்பெறுமா இல்லையா என்ற சந்தேகத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது இத்தகவலை கேட்டு மகிழ்சியில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க,
லைக்காவின் தயாரிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்டதாக புகைப்படத்துடன் பதிவிட்ட ஷங்கர், அடுத்ததாக 'இந்தியன் 2' படத்தின் மீது கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திரைப்பட அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

