CBSE 12th Result 2023: சிபிஎஸ்இ பிளஸ் 2 முடிவு; கே.வி. உள்ளிட்ட பள்ளிகள் வாரியாகத் தேர்ச்சி விகிதம் எவ்வளவு?- முழு விவரம்
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஜவஹர் நவோதயா, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஜவஹர் நவோதயா, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்தன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. குறிப்பாக நாடு முழுவதும் மற்றும் 26 நாடுகளிலும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
குறிப்பாக 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையிலும், சில தேர்வுகள் 1.30 மணி வரையிலும் நடைபெற்றன. செய்முறை தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன.
16.6 லட்சம் பேர் எழுதிய தேர்வு
இந்தத் தேர்வை 16 லட்சத்து 96 ஆயிரத்து 349 மாணவர்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 15,079 பள்ளிகளில் 6714 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மையத்துக்கும் தனித்தனியாக தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 115 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 16,60,511 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 14, 50,174 மாணவர்கள் தேர்வான நிலையில் தேர்ச்சி விகிதம் 87.33 ஆகக் குறைந்துள்ளது.
இந்த நிலையில், ஜவஹர் நவோதயா, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
பள்ளி தேர்ச்சி விகிதம்
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் 97.51 சதவீதம்
மத்திய திபெத்திய பள்ளி நிர்வாகம் (CTSA) 96.77 சதவீதம்
கேந்திரிய வித்யாலயா 92.51 சதவீதம்
தனிப் பள்ளிகள் 87.95 சதவீதம்
அரசு உதவிபெறும் பள்ளிகள் 87.17 சதவீதம்
அரசுப் பள்ளிகள் 83.83 சதவீதம்
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?