Bihar Accident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார் - பைக் - லாரி, பயங்கர விபத்தில் 9 பேர் பலியான சோகம்
Bihar Accident: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் அருகே கண்டெய்னர் லாரி மீது, கார் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
Bihar Accident: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் அருகே கண்டெய்னர் லாரி மீது, கார் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
காவல்துறையின் விசாரணயின் முதற்கட்ட தகவல்களின் படி, ஸ்கார்ப்பியோ காரானது சசரம் பகுதியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேவ்காளி கிராமம் அருகே உள்ள மொஹானியா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லேசாக மோதியுள்ளது. தொடர்ந்து, தாறுமாறாக ஓடிய கார் சாலையின் குறுக்கே இருந்த டிவைடரை தாண்டி மறுபக்கம் சென்று, அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளது. இதில் அந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து மொத்தமாக நசுங்கியது. விபத்தில் காரில் இருந்த அனைவருமே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#WATCH | Bihar: Nine people died in a collision between a speeding car & a container in Kaimur. Investigation underway. Further details awaited. pic.twitter.com/BJHw2fmRCu
— ANI (@ANI) February 25, 2024