மேலும் அறிய

Bihar Election: பீகார் தேர்தல் 2025: 30 ஆண்டுகள் MLA இல்லாமல் தொடர்ந்து CM-ஆக நிதிஷ்! ஆச்சரியமூட்டும் அரசியல் பின்னணி!

Bihar Election 2025 Result: "பீகாரில் நிதிஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடாமலே, தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்"

பீகாரின் அரசியல் முகங்களாக கருதப்படும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே, மாநிலத்தின் முன்னோடியாக கருதப்படும் கர்பூரி தாக்கூரிடம் அரசியல் பயின்றவர்கள் ஆவர். கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சரானார். 

ஆனால், போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால், ஒரே வாரத்தில் அவரது ஆட்சி பறிபோனது. ஆனாலும், 2004 ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும், வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய அமைச்சர் பதவி வகித்தார்.

முதல் முறை முதலமைச்சர் பதவி 

கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக முறையே 88 மற்றும் 55 தொகுதிகளை கைப்பற்றின. இதனால், கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதல்முறையாக பீகார் மாநில முதலமைச்சரானார். அதன் பிறகு தொடர்ந்து நேரத்திற்கு ஏற்றவாறு கூட்டணியை மாற்றி அமைத்து முதலமைச்சர் நாற்காலியை தக்க வைத்து வந்தார். இடையில் 2013 ஓராண்டு மட்டுமே முதலமைச்சர் பதவியில் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால் இவ்வளவு நாட்கள் முதலமைச்சராக இருக்கும் நிதீஷ்குமார் ஒருமுறை கூட சட்டமன்ற உறுப்பினராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்.எல்.ஏவுக்கு நிற்காத நிதிஷ்

இதுவரை 9 வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்று இருந்தாலும், கூட ஒருமுறை மட்டுமே எம்எல்ஏவாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கடந்த 35 ஆண்டுகளாக நிதிஷ் குமார் எம்எல்ஏ ஆகாமலே முதல்வர் பதவியை வகித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம், பீகாரில் மேலவை உறுப்பினர் பதவி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் சட்டசபை மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை மேலவை உறுப்பினர் என்ற பதவி இருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்பட மாநிலங்களில் உள்ளது. இவ்வாறு மேலவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார். அவ்வாறு தொடர்ந்து நித்திஷ் குமார் ஒவ்வொரு முறையும் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் 1921-ஆம் ஆண்டு முதல் மேலவை உறுப்பினர் பதவிகள் இருந்து வந்தன. 1986 ஆம் ஆண்டு மேலவையை அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் கலைத்தார். இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மேலவை கொண்டு வர திமுக சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget