மேலும் அறிய

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிரான வழக்கு...கையில் எடுத்த உச்சநீதிமன்றம்..!

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர், இந்த விவகாரத்தில் தனித்தனியாக பொது நல வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தனர்.

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலவரத்திற்கும் அப்போதைய குஜராஜ் முதலமைச்சரான மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து அந்த ஆவணப்படம் பேசியிருந்தது.

இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு இந்தியாவில் தடை விதித்தது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது.

ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். அதேபோல, தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், அவசர கால அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு தடை வதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆகியோர், இந்த விவகாரத்தில் தனித்தனியாக பொது நல வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். மேலும், விரைவில் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா ஜே.பி.பார்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு, தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தது.

மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம், ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோரும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வழக்கு குறித்து பேசிய சி.யு.சிங், "சமூக ஊடகங்களில் இருந்து ஆவணப்படம் பற்றிய இணைப்புகளை அகற்ற ஐடி விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது. மேலும்,ஆவணப்படம் தொடர்பான என். ராம் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரின் ட்வீட்கள் நீக்கப்பட்டன.

ஆவணப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை. ஆவணப்படத்தை திரையிட்டதற்காக அஜ்மீரில் உள்ள கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

 

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டதை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக அவர் சாடியுள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் பலியான சோகம் - எங்கே நிகழ்ந்தது இந்த அசம்பாவிதம்?
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
கால் முறிந்த குட்டி யானை ராஜாவுக்கு ஆனந்த் அம்பானி உதவியால் வன்தாராவில் புது வாழ்வு!
கால் முறிந்த குட்டி யானை ராஜாவுக்கு ஆனந்த் அம்பானி உதவியால் வன்தாராவில் புது வாழ்வு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் மழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
நாளை கொட்டித்தீர்க்கப்போகும் மழை! - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
DMK: கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகுமா? விஜய்க்கு திமுக கேள்வி
"கோமாளி ஆட்சியாளர்களின் Ego-வால் துயரில் விவசாயிகள்" - முதல்வர் மீது எதிர்க்கட்சித்தலைவர் காட்டம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Geetha Jeevan: ”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
”செருப்பு அணியாமல், சாவு வீட்டில் ஷுட்டிங்” முதலமைச்சர் விஜயை மோசமாக விமர்சித்த கீதா ஜீவன்..
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
IND vs NZ: இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட் தேவை.. நியூசிலாந்தை துவம்சம் செய்யுமா பும்ரா படை?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Deepam Festival: திருவண்ணாமலை தீபத் திருவிழா! முதல்முறையான 3000 இலவச தரிசன டிக்கெட்! மொபைலில் டவுன்லோடு செய்வது எப்படி?
Embed widget