மேலும் அறிய

வெளிநாட்டு தீவிரவாத குழுவுடன் பிஎஃப்ஐ அமைப்புக்கு தொடர்பு...வெளியான பகீர் தகவல்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அதனோடு தொடர்புடைய துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் 2 முறை சோதனை நடந்த நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த அமைப்பு மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. 

செப்டம்பர் 22 முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு , அமலாக்க இயக்குநரகம் மற்றும் மாநில காவல்துறை ஆகியவை தீவிர சோதனை நடத்தினர். 

முதற்கட்ட சோதனையில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட சோதனையில், PFI ஐச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர். என்.ஐ.ஏக்கு இந்த அமைப்புக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்தது.

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

சிஏஏ சட்டத்திற்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் PFI அமைப்பு செயல்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த இந்த அமைப்பு திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்ற விவகாரங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும் இந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகவும், தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு சர்வதேச பயங்கரவாத  குழுக்குழுடன் தொடர்பு உள்ளதற்கான பல சம்பவங்கள் நிகழ்ந்த உள்ளதாகவும் மத்திய அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ரெகப் இந்தியா பவுண்டேஷன் (RIF), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (CFI), அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC), தேசிய மனித உரிமைகள் அமைப்பு (NCHRO), நேஷனல் வுமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா போன்ற அமைப்புகளும்  5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பு சிரியாவில் அல்-கொய்தாவுடன் இணைந்த பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாத துருக்கியக் குழுவுடன் நெருங்கிய உறவைப் பேணி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட துருக்கிய தீவிரவாத குழு, மனித உரிமைகள் அமைப்பாக தன்னை முன்னிறுத்தினாலும் அல்-கொய்தாவுடன் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த அமைப்பு, ஜனவரி 2014 இல் சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

தலைப்பு செய்திகள்

பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Embed widget