Atrocities On Dalits:”என் ஆட்டை திருடுனியா.." பட்டியலின இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடித்த கொடூரம்.. தெலங்கானாவில் ஷாக்!
தெலங்கானாவில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரை ஒரு கும்பல் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Atrocities On Dalits: தெலங்கானாவில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரை ஒரு கும்பல் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதிய வன்மங்கள்
சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, பட்டியலினகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. இந்நிலையில், தற்போது தெலங்கானாவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆட்டை திருடியதாக சந்தேகம்:
தெலங்கானா மாநிலம் மந்தமாரி அங்காடி தெருவைச் சேர்ந்தவர் கோமுராஜூலா ராமுலு. இவரது மனைவி ஸ்வரூபா. இவர்களது மகன் ஸ்ரீனிவாஸ். இந்த குடும்பத்தினர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது ஆடுகள் இரண்டு நாட்களுக்கு காணாமல் போயிருந்தது. இவர்கள் ஆடுகளை அங்குமிக்கும் தேடி பார்த்தனர். தேடி பார்த்தும் கிடைக்காததால், இவர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதாவது, 19 வயதான தேஜா மற்றும் 30 வயதான கிரண் ஆகியோர் மீது இவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை தேஜா மற்றும் கிரண் ஆகியோரை அழைத்து வந்து ஆட்டு கொட்டையில் அடைத்துள்ளனர்.
தலைகீழாக தொங்கவிட்டு அடித்த கொடூரம்:
அப்போது, அந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அவர்களை தலைகீழாக தொங்கவிட்டு, அவர்களின் தலைக்கு அடியில் தீ வைத்துள்ளனர். பல மணி நேரமாக தேஜா மற்றும் கிரணை தொங்கவிட்டு கடுமையாக அடித்துள்ளனர். தொடர்ந்து அவர்களை சித்ரவதை செய்ததோடு, ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இவர்கள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, சனிக்கிழமை காலை கிரண் மற்றும் தேஜா மோசமான காயங்களுடன் வீட்டிற்கு வந்து தனது குடும்பத்தினரிடம் நடந்ததை விவரித்தனர். இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆட்டை திருடிய சந்தேகத்தின்பேரில் பட்டியலின இளைஞர்களை ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Seeman: காங்கிரஸை கூட்டணியில் இருந்து நீக்கினால் திமுகவிற்கு ஆதரவு - ட்விஸ்ட் கொடுத்த சீமான்..!
Sanatan Dharma: "இந்து மத வெறுப்பு.. கலாசாரம் மீதான தாக்குதல்".. உதயநிதியை அட்டாக் செய்த அமித் ஷா