அரக்கர்களாக மாறிய அதிகாரிகள்.. ஜெயிலில் கொடூரம்.. மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டுவைக்கல
இளம் பெண்ணை சிறைக்குள் இழுத்து சென்று, அதிகாரிகள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். ஆதரவற்ற மனநல பாதிக்கப்பட்ட பெண் எனக் கூட பார்க்காமல் சிறை வார்டன்கள் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மனநல பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை சிறைக்குள் இழுத்து சென்று, அதிகாரிகள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற பெண் எனக் கூட பார்க்காமல் சிறை வார்டன்கள் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அரக்கர்களாக மாறிய ஜெயில் வார்டன்கள்:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மனநல பாதிக்கப்பட்ட பெண் எனக் கூட பார்க்காமல், அவரை சிறை வளாகத்திற்கு இழுத்துச் சென்று, சிறை காவல் அதிகாரிகள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை கூட விட்டுவைக்கல:
நேற்று இரவு 1.30 மணியளவில் அந்தப் பெண் சிறை வளாகத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் இரண்டு சிறைக் காவலர்கள் வசமாக சிக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திர கலிதா என குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 45 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் குவஹாத்தியின் பஞ்சாபரி மற்றும் போரகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தெருவில் தனியாக இருந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் அதைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
சமீபத்தில், பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்தது. அது ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க: வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்






















