Amazon : ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓவின் கணக்குகளை முடக்கியது அமேசான் நிறுவனம்
இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது.

இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது.
தற்போது வரை கிடைத்துள்ள செய்தி தகவல்களின்படி 40 பத்திரிகையாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. இவை தவிர பிரதமர் மோடி அமைச்சரவையில் உள்ள 2 அமைச்சர்கள், பாதுகாப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள் மற்றும் சில தொழிலதிபர்கள் ஆகியோரின் கணக்குகளும் வேவு பார்க்கப்பட்டதாக கூறுப்படுகிறது. இது தொடர்பான விவரம் விரைவில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெகாசஸ் ஆய்வுகளில், என்எஸ்ஓ நிறுவனம் அமேசான் வெப் சர்வீஸஸை பயன்படுத்துவது தெரியவந்தது. இந்நிலையில், அமேசான் வெப் சர்வீஸஸ் எனப்படும் ஏ.டபிள்யூ.எஸ் நிறுவனம், இந்த என்எஸ்ஓ நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை நிறுத்திக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Woah! Big impact from our #PegasusProject investigation: Amazon is shutting down NSO Group infrastructure. Not sure if *all* of it, or just what they deem as relevant. Forensic reports have shown that the Israeli company's spyware uses Amazon Web Services. https://t.co/yoh9Rmihce
— Ilya Lozovsky (@ichbinilya) July 19, 2021
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உளவு பார்க்கப்பட்டுள்ளார்
என்எஸ்ஓ நிறுவனம், அமேசான் வெப் சர்வீசஸ்களின் ஓர் அங்கமான க்ளவுட் ஃப்ரண்ட் வசதியை சமீபத்தில் பயன்படுத்த தொடங்கி இருந்தது. இது பயன்படுத்துவதன் மூலம், என்எஸ்ஓ நிறுவனத்தின் பரிவர்தனைகளை ட்ராக் செய்வது கடினம். ஏற்கனவே, என்எஸ்ஓ நிறுவனம் மீதான புகார் எழுந்தபோது அமேசான் நிறுவனம் அமைதி காத்தது. ஆனால். இம்முறை வெளிப்படையாக என்எஸ்ஓ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபாரன்சிக் நிபுணர்களின் ஆய்வுகளின்படி இந்த பெகசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக பல ஐஃபோன்களை இது அதிகம் வேவு பார்த்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஹேக்கிங் தொடர்பாக தற்போது பெரியளவில் செய்தி வெளியாக முக்கிய காரணம் பாரீஸில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் அம்னெஸ்டி இண்டர்நெஷ்னல் ஆகிய இரு அமைப்புகளுக்கும் கிடைத்த தகவல்கள்தான். அவை பல்வேறு நாட்டின் ஊடகங்களுக்கு இந்த தகவலை அளித்துள்ளதால் தான் இவ்வளவு பெரிதாக இந்த விவகாரம் எழுந்துள்ளது.
இந்தியா தவிர அஜர்பைஜான், பஹ்ரைன்,கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு ஏமிரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த பெகசஸ் ஸ்பைவேர் அட்டாக் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pegasus spyware journalist : தொலைபேசி ஒட்டுக்கேட்பு.. இது தான் அந்த பத்திரிகையாளர்கள் லிஸ்ட்!





















