Pegasus spyware journalist : தொலைபேசி ஒட்டுக்கேட்பு.. இது தான் அந்த பத்திரிகையாளர்கள் லிஸ்ட்!
பெரும்பாலான ஒட்டுகேட்பு சம்பவங்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாக கொண்டு நடந்திருக்கலாம் என்று குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்திய 'பெகாசஸ்' ஸ்பைவேர் செயலி மூலம் உலகம் 180 பத்திரிக்கையாளர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, அஜர்பைஜான், பஹ்ரைன், கசக்கஸ்தான், மெக்சிக்கோ, மொராக்கோ, உருவாண்டா, சவுதி அரேபியா, அங்கேரி, இந்தியா, யுஏஇ ஆகிய நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பட்டியலில் மேலே, குறிப்பிட்ட நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
40 இந்திய பத்திரிகையாளர்களின் உரையாடல்கள் ஒட்டுகேட்பு:
இப்பட்டியலில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முன்னாள் பத்திரிகையாளர் சுஷாந்த் சிங், இந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக ஆசிரியர் ஷிஷிர் குப்தா, முன்னாள் செயல் அலுவலர் பிரசாந்த் ஜா, தேசிய பாதுகாப்பு நிருபர் ராகுல் சிங் மற்ற மின்ட் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பணிபுரியும் ரித்திகா சோப்ரா (கல்வி மற்றும் அரசியல் விசயங்கள்) முசம்மில் ஜமீல் (காஷ்மீர் அரசியல் விசயங்கள்), இந்தியா டுடே நிறுவனத்தின் சந்தீப் உன்னிதன் (தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு, இந்திய இராணுவ விசயங்கள்), TV18-ல் பணிபுரியும் மனோஜ் குப்தா ( பாதுகாப்பு விவகாரங்கள்) , தி பிரிண்ட் நிறுவன ஆசிரியர் சேகர் குப்தா, தி இந்து நாளிதழில் உள்துறை அமைச்சகம் சார்ந்த விவகாரங்களை எழுதும் விஜய்தா சிங் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது மோடியும், அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதிமுறைககள் மீரியதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,தேர்தல் ஆணையர் அசோக் லவசா இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. தேர்தல் நடத்தைமுறை தொடர்பான விசாரணையில் தேர்தல் ஆணையத்திடம் ஒருமித்த கருத்து இல்லை என்பதை ரித்திகா சோப்ரா முதலில் செய்தியாக்கினர். இதற்காக, 2020ம் ஆண்டு அவருக்கு International Press Institute (India) Award வழங்கப்பட்டது.
2018ல், மூத்தப் பத்தரிகையாளர் சுஷாந்த் சிங் தொலைபேசியை, இஸ்ரேல் பெகசஸ் ஸ்பைவேர் செயலி, உளவு பார்க்கத் தேர்ந்தெடுத்துள்ளது. 2018-19 காலகட்டங்களில் ரஃபேல் ஒப்பந்தம் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டில் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா கட்டாய விடுப்பு வழக்கப்பட்ட பிரச்சனை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம், நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium-கொலீஜியம்) செயல்முறை, 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவாகாரங்களில் கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் தொலைபேசி பெகசஸ் ஸ்பைவேர் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருப்பதை ஃபாரன்சிக் முடிவுகளும் உறுதி செய்துள்ளன.
நேற்று இரவு, பெகாசஸ் உளவு பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் 'தி வயர்' இணையதளத்தின் மூத்த பத்தரிக்கையாளர் ரோகினி சிங், நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் எம்.கே. வேணு ஆகியோர் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பிசிசிஐ செயலாளராக இருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா வருமானம் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் தொழிலதிபர் நிகில் மெர்ச்சண்ட் (Nikhil Merchant) வணிக விவகாரங்கள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வந்தவர்.
Exclusive: Mukesh Ambani, his family and friends owned INX media- the firm at the heart of a bribery scandal, prime accused Peter Mukherjea told the Enforcement Directorate. ED never called Ambani or friends for questioning.https://t.co/teQjIMspgL
— Rohini Singh (@rohini_sgh) December 7, 2020
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒட்டுகேட்பு:
பத்திரிக்கையாளர்களைத் தாண்டி, சமூக செயர்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி (பெயர் வெளியிடப்படவில்லை) , இந்நாள் மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கும் நோக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான ஒட்டுகேட்பு சம்பவங்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாக கொண்டு நடந்திருக்கலாம் என்று குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
பீமா கொரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள்/உறவினர்கள் தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டுள்ளது.