மேலும் அறிய

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்...ஏர் இந்தியா விமானி, விமான குழுவுகுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை...!

மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், விமானத்தை இயக்கிய விமானி, விமான குழுவினர் நான்கு பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டும் விளக்கம் கேட்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான காம்ப்பெல் வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "விமானத்தில் மதுபானம் வழங்கியது, சம்பவத்தை கையாண்ட விதம், புகாரை பதிவு செய்தது, பிரச்னையை தீர்த்து வைத்தது உள்ளிட்ட அம்சங்களில் உள்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், "இந்த அனுபவங்கள் எங்களுக்கு வலியை தருகிறது. இந்த விவகாரத்தை சிறப்பாக கையாண்டு இருக்கலாம். எதிர்காலத்தில், இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாதவாறு தடுக்க விமான பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த விரிவான திட்டம் தொடங்கப்படும்.

விமான பயணத்தின்போது மதுபானம் அளிப்பது குறித்த கொள்கை மறுபரிசீலனை செய்யப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தொடர்ந்து உதவி வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி, இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பயணியின் குடும்பத்தாரிடம் விமான நிறுவனம் சார்பில் பேசப்பட்டது. டிசம்பர் 2ஆம் தேதி, விமான டிக்கெட்டுக்கான பணம் அந்த பெண் பயணியிடம் திருப்பி செலுத்தப்பட்டது.

கடந்தாண்டு டிசம்பர் 20, 21, 26 மற்றும் 30 தேதிகளில் மூத்த விமான ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து பேசினர். 

டாடா குழுமத்தின் தலைவருக்கு அந்த பெண் எழுதிய கடிதத்தில், "சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கையில் உட்கார விரும்பவில்லை என கூறினேன். எனவே, எனக்கு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எனது இருக்கைக்குத் திரும்பும்படி விமான பணியாளர்கள் கூறினர். சிறுநீர் கழிக்கப்பட்ட இருக்கை கவர் கொண்டு மூடப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து துர்நாற்றம் அடித்து கொண்டிருந்தது. விமான பணியாளர்கள் இருக்கையில் கிருமிநாசினி தெளித்தனர். 

அதே இருக்கையில் அமர்வதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். எனக்கு மற்றொரு விமான பணியாளரின் இருக்கை வழங்கப்பட்டது. அன்று முழுவதும் நான் அங்கேயே படுத்து உறங்கினேன். பல பிஸ்னஸ் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்த போதிலும் எனக்கு அந்த இருக்கை வழங்கப்படவில்லை" என குற்றம் சாட்டி இருந்தார்.

இதையடுத்து, சிறுநீர் கழித்த நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Embed widget