மேலும் அறிய

Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!

பாண்டிச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் இன்னும் 3 நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இறுதிக்கட்ட பரப்புரை அனல் பறந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரி, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் அடுத்த வாரம் 9ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

3 மாநில தேர்தல்:

இந்த 3 மாநிலங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதமே நிறைவடைந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள மேலே கூறிய 3 மாநிலங்களிலும் உள்ளதால், இறுதிக்கட்ட பரப்புரை அனல் பறந்து வருகிறது. 9ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை மட்டுமே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பரப்புரை:

இதனால், இந்த 3 மாநிலங்களிலும் இறுதிக்கட்ட பரப்புரை மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. கேரளாவைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் மிக கடுமையான போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. மொத்தமுள்ள 140 தொகுதிகளிலும் இந்த இரண்டு கூட்டணியினரும் மிகவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும், என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு கட்சியினருக்கும் போட்டியாக தவெக-வும் களத்தில் இறங்கியுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தீவிர பரப்புரையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக - காங்கிரஸ் மோதல்:

வடகிழக்கு மாநிலத்திலே மிகவும் முக்கியமான அசாம் மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நோக்கத்தில் பாஜக களமிறங்கியுள்ளது. அங்குள்ள 126 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் அசாம் அங்கு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 80 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி கைப்பற்றிய நிலையில், பாஜக மட்டும்  67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும், அசாமை தங்கள் வசப்படுத்த காங்கிரசும் மிகவும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக - காங்கிரஸ் மோதல்:

இந்த 3 மாநிலங்களைப் பொறுத்தமட்டிலும் கேரளா தவிர மற்ற 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் - பாஜக மோதலாகவே உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் மோதலாக உள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தலை பாதுகாப்பாகவும், எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடத்துவதற்கும் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. பறக்கும் படையினர், பாதுகாப்பு படையினர் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிக பாதுகாப்பும், தீவிர கண்காணிப்பிற்கும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget