மேலும் அறிய

ரஃபேலை சுடவே இல்லையாம்! பாகிஸ்தானின் பொய்களை அம்பலப்படுத்திய அமெரிக்க முன்னாள் விமானி

ரஃபேல் போர் விமானத்தைப் புகழ்ந்து பேசிய ரையன், "ரஃபேல் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன போர் விமானமாகும். எனது ஆய்வில், பாகிஸ்தான் ஒரு ரஃபேல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தவில்லை என்றார்.

கடந்த ஆண்டு இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்'  நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதற்குத் துணைநிற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகவும் ஒரு வலுவான செய்தியைப் பதிவு செய்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் தற்காப்புத் திறன் உலக நாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்தப் போரில் இந்திய ராணுவத்திடம் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தங்கள் நாட்டு மக்களின் கோபத்தைத் தணிக்க, "இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை நாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டோம்" என்று பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், பாகிஸ்தானின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்திய விமானப்படையின் 'டிகோய்' தொழில்நுட்பம்!

இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி இந்திய விமானப்படை எவ்வாறு அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது என்பது குறித்த உண்மைகளை அமெரிக்காவின் முன்னாள் எஃப்-15இ (F-15E) போர் விமானி ரையன் போடன்கெய்மர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் தரப்பில் தாங்கள் இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டதாகக் காட்டப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை போர் விமானங்கள் அல்ல, மாறாக போர் விமானங்கள் எரிபொருள் தீர்ந்ததும் கழற்றி எறியும் 'டிராப் டேங்க்' (Drop tanks) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வான்வழிப் போரின்போது இத்தகைய உத்திகளைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த 'டிகோய்' தொழில்நுட்பத்தை இந்தியா மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானை ஏமாற்றியுள்ளது," என்று தெரிவித்தார்.

 ரஃபேல் வீழ்த்தப்படவில்லை !

பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தைப் புகழ்ந்து பேசிய ரையன், "ரஃபேல் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன போர் விமானமாகும். எனது ஆய்வில், பாகிஸ்தான் ஒரு ரஃபேல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக நம்பினாலும், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியா பெரும் பலனைப் பெற்றுள்ளது," என்று கூறினார்.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்வைத்த எந்தக் குற்றச்சாட்டையும் உலக நாடுகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஆகியோரின் கூற்றுகள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபணமானது. பாகிஸ்தான் இழந்த விமானங்களின் எண்ணிக்கையை மறைத்து, வீழ்த்தியதாகப் பொய் கணக்கு காட்டியது உலக அளவில் அம்பலமானது. அதேவேளையில், இந்தியா பாகிஸ்தானின் பல போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget