Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Padma Awards 2025 Winners Tamil Nadu List:நடிகர் அஜித் குமார், வேலு ஆசான் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் அறிவிப்பு:
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பினை பாராட்டும் வகையில் பத்ம விருதுகள் இந்திய அரசின் மூலம் அறிவிக்கப்படும். பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று விருதுகளும் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படுகிறது.
STORY | Padma Awards 2025: Sharda Sinha, Pankaj Udhas, Shekhar Kapur among artistes honoured
— Press Trust of India (@PTI_News) January 25, 2025
READ: https://t.co/ceLjqm97Jj https://t.co/ECRBgtBKiT
2025-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம விபூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 23 பெண்கள் பத்ம விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல்கலை நிபுணர் தாமு, பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதம் விருதுகள் பெறுவோர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi tweets, "Congratulations to all the Padma awardees. India is proud to honour and celebrate their extraordinary achievements. Their dedication and perseverance are truly motivating. Each awardee is synonymous with hard work, passion and innovation, which has… pic.twitter.com/HI6MZCKt8a
— ANI (@ANI) January 25, 2025
தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை காணலாம்.
பத்ம பூஷண் விருது:
- நல்லி குப்புசாமி - தொழில் துறை
- நடிகர் அஜித் குமார்- தமிழ் சினிமா (கலை)
- சோபனா சந்திரகுமார் - தமிழ் சினிமா (கலை)
பத்ம் ஸ்ரீ விருது:
- குருவாயூர் துரை (கலை)
- கே.தாமோதரன் (சமையல் கலை)
- லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் - கல்வி - இதழியல்)
- எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - பொறியியல்)
- புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை)
- ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு - கிரிக்கெட்)
- ஆர். ஜி. சந்திரமோகன் - (தொழில்துறை)
- ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை)
- ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி)
- வேலு ஆசான் (கலை, பறை இசை)
I am deeply humbled and honoured to receive the esteemed Padma Award by the President of India.
— Suresh Chandra (@SureshChandraa) January 25, 2025
I extend my heartfelt gratitude to the Hon'ble President of India, Smt. Droupadi Murmu and the Honourable Prime Minister, Shri Narendra Modi for this prestigious honour. It is a…
பத்ம பூஷண் விருது அறிவிப்பு வெளியான உடன் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

