ABP-CVoter Karnataka Opinion Poll:கர்நாடக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு...6 மண்டலங்கள் வாரியாக யார் முன்னிலை?
ABP-CVoter Opinion Poll:கர்நாடக மாநிலத்தில் மண்டலங்கள் வாரியாக எந்த கட்சிகள் எவ்வளவு இடம்பெறும் என்பது குறித்தான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை ஏபிபி நியூஸ் - டீம் சி வோட்டர்ஸ் வெளியிட்டுள்ளது
கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை 113 ஆக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி நியூஸ் - டீம் சி வோட்டர்ஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்:
கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், சட்டப்பேரவைக்கான தேர்தல் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள், மே மாதம் 13ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் தேர்தல் குறித்தான பேச்சு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் குறித்தான வேலைகள் திட்டமிட ஆரம்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை ஏபிபி சி வோட்டர்ஸ் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்கள் வாரியாக நடத்தியது.
மத்திய கர்நாடகம், ஹைதராபாத் கர்நாடகம், கடலோர கர்நாடகம், மும்பை கர்நாடகம், பெங்களூரு பெருநகர பகுதிகள், பழைய மைசூரு பகுதிகள் கர்நாடகம் ஆகிய 6 மண்டலங்களில் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் விவரம்....
மத்திய கர்நாடகம்:
ஹைதராபாத் கர்நாடகம்:
கடலோர கர்நாடகம்:
பெங்களூரு பெருநகர பகுதிகள்
மும்பை கர்நாடகம்:
பழைய மைசூரு பகுதிகள் கர்நாடகம்:
ஏபிபி- சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று, தென்மாநிலத்தில்ஒரே மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜகவை அகற்றும்.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 தேர்தலில் 104 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜக, இந்த முறை 34.7 சதவீத வாக்குகளுடன் 68-80 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், 2023 தேர்தலில் 23 முதல் 35 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018 தேர்தலில் 104 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜக, இந்த முறை 34.7 சதவீத வாக்குகளுடன் 68-80 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், 2023 தேர்தலில் 23 முதல் 35 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50% of respondents in the #ABPCVoterSurvey said that the #BJP government performed poorly. As much as 47% of the respondents, said that CM Basavaraj Bommai's performance was poor.
— ABP LIVE (@abplive) March 29, 2023
Live updates here:
🔗 https://t.co/FM6REIadsq #Karnataka #KarnatakaElections2023 #ABPOpinionPoll pic.twitter.com/F3yjzDoKdR