மேலும் அறிய

Karnataka Exit Poll: கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க போவது யார்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!

கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் 110-112 தொகுதிகள் வரை பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு:

மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 83 முதல் 95 தொகுதிகள் வரை, பாஜக கைப்பற்றும் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பழைய மைசூரு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், 21 முதல் 29 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய இந்த கருத்துகணிப்பு முடிவுகளின்படி, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில், 38 சதவிகித வாக்குகளை பெற்ற காங்கிரஸ், இந்த முறை 41.1 சதவிகித வாக்குகள் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 36 சதவிகித வாக்குகளை பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 38.3 சதவிகித வாக்குகள் வரை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், கடந்த தேர்தலில் 18 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை, 14.3 சதவிகித வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பு முடிவுகளில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண்ணிக்கையை விட ஒரு தொகுதி குறைவாக காங்கிரஸ் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல்:

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆண்டின் தொடக்கத்தில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லது பா.ஜ.க. அங்கும் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது.

அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இன்றைய தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. இதற்கான முடிவுகள், 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

மற்ற மாநிலங்களை போல, காங்கிரஸ், எப்போதும் போல், உள்ளூர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்தே கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது. அதேபோல, பாஜக, தேசிய பிரச்னைகளை மையப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொண்டது.

வாக்குப்பதிவு நிலவரம்:

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் அக்கட்சிக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்காக, அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணி நிலவரப்படி, 65.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், மக்கள் எப்போதும் போல ஆர்வத்துடன் வாக்களித்த போதிலும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி இருக்கிறது. யஷ்வந்த்பூர் தொகுதியில் அதிகபட்ச வாக்கு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget