மேலும் அறிய

"சுய சார்பு இந்தியாவை படைக்க இது உந்து சக்தி": ஐஎன்எஸ் விக்ராந்த் அர்ப்பணிப்பு விழாவில் மோடி!

இந்த நிகழ்வு, உலக நாடுகளிடையே இந்தியாவின் எழுச்சியையும், உணர்வையும் வெளிப்படுத்தும். ஐஎன்எஸ் விக்ராந்த் சாதாரண போர்க்கப்பல் அல்ல, ராட்சத உருவம் கொண்டது, மிகவும் தனித்துவமானது, சிறப்பு மிக்கது.

இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசுக்கு உந்து சக்தியாக விளங்கி, எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

ஐ என் எஸ் விக்ராந்த் அறிமுக விழா

கேளர மாநிலம் கொச்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் விழாவில், இந்திய கடற்படையின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்தை  நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் MiG-29K போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 1,600 பணியாளர்கள் தங்க முடியும் என்று கூறப்படுகிறது. தொடக்கத்தில், MiG போர் விமானங்களும் சில ஹெலிகாப்டர்களும் ஐஎன்எஸ் விக்ராந்தில் நிலைநிறுத்தப்படும். போயிங் மற்றும் டஸ்ஸால்ட் விமானங்கள், 26 போர் கப்பல் தள அடிப்படையிலான விமானங்களை வாங்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. 

கடற்படைக்கு புதிய கோடி

இந்த விழாவில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதில் செயின்ட் ஜார்ஜ் கிராஸ் நீக்கப்பட்டு காலனியத்துவத்திற்கு எதிரான கோடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்க, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான், அமைச்சர்கல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில் பேசிய பிரதமர் மோடி இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற, சுய சார்பு இந்தியாவுக்கு இது உந்து சக்தியா விளங்கி, எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்: வீட்டில் மனைவியுடன் பூஜை; மருத்துவர் வராததால் சிறுவன் உயிரிழப்பு: ம.பி.யில் அவலம்

மோடி பேச்சு

அதில் பேசிய மோடி, "இன்று, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியரும் இந்த கேரள கடற்கரையில், புதிய சூரிய உதயத்தை பார்க்கிறார்கள். ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை அர்ப்பணிக்கும் இந்த நிகழ்வு, உலக நாடுகளிடையே இந்தியாவின் எழுச்சியையும், உணர்வையும் வெளிப்படுத்தும். ஐஎன்எஸ் விக்ராந்த் சாதாரண போர்க்கப்பல் அல்ல, ராட்சத உருவம் கொண்டது, மிகவும் தனித்துவமானது, சிறப்பு மிக்கது. இந்த போர்க்கப்பல் நம்மிடையே கடின உழைப்பையும், அறிவையும், 21ம் நூற்றாண்டுக்கு இந்தியா செய்யவேண்டிய கடமையையும் வலியுறுத்துகிறது", என்றார்.

இந்தியாவின் பெருமிதம்

மேலும் பேசிய அவர், "இந்த போர்க்கப்பலின் இலக்குகள் வேகமாக இருக்கும், நீண்ட பயணம் மேற்கொள்ள முடியும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும். சுதந்திர இந்தியாவின் ஒப்பற்ற படைப்பு இந்த விக்ராந்த். உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று முதல் இடம்பிடித்துள்ளது. இந்தியாவிற்கு இதன்மூலம் புதிய நம்பிக்கையை கிடைத்துள்ளது. இது உள்நாட்டு படைப்பின் அடையாளம், உள்நாட்டு வளங்கள், திறமைகள், திறன்களின் கூட்டு சக்தியால் மிகவும் வலிமையுடன் உருவாகி உள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜா, தன்னுடைய படைத்திறனைப்பயன்படுத்தி கப்பற்படையை உருவாக்கி எதிரிகளை தூங்காவிடாமல் செய்தார். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, இந்திய கப்பல்களின் வலிமையைப் பயன்படுத்தி, மிரட்டி வர்த்தகம் செய்தனர். இந்தியாவின் கடல்சார் வலிமையை உடைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். எனவே இது ஒரு மிகப்பெரிய மைல் கல்", என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget