வீட்டில் மனைவியுடன் பூஜை; மருத்துவர் வராததால் சிறுவன் உயிரிழப்பு: ம.பி.யில் அவலம்
தனது மகனை சிகிச்சைக்காக அழைத்துவர அரசு மருத்துவரோ வீட்டில் பூஜையில் பிஸியாக இருந்ததால் தாமதமாக வர வாழ வேண்டிய பிஞ்சு மலர் 5 வயதிலேயே சருகானது.
தனது மகனை சிகிச்சைக்காக அழைத்துவர அரசு மருத்துவரோ வீட்டில் பூஜையில் பிஸியாக இருந்ததால் தாமதமாக வர வாழ வேண்டிய பிஞ்சு மலர் 5 வயதிலேயே சருகானது. மருத்துவ அலட்சியத்தால் தான் இது நடந்தது என்று உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பார்கி நகரின் தின்ஹடா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பாண்டே. இவர் நேற்று காலை 10 மணியளவில் தனது 5 வயது மகனை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதாரா நிலையத்திற்கு அழைத்து வந்தார். சிறுவனுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. சிறுவனுக்கு உடனடி சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் மருத்துவர் லோகேஷ் குமார் அங்கு வரவில்லை. பல மணி நேரம் காத்திருப்புக்குப் பின் செவிலி கொடுத்த தகவல் மருத்துவர் பிஸியாக இருக்கிறார் என்பதே.
இந்நிலையில் அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். மருத்துவ வேலை நேரத்தில் மருத்துவர் அங்கில்லாமல் எங்கு சென்றார் என்று ஆவேசமடைந்தனர். ஆனால் மருத்துவர் லோகேஷ் குமாரோ வீட்டில் மனைவி நேர்த்திக்கடன் செய்யும் சிறப்புப் பூஜைக்காக காத்திருந்துள்ளார். இந்த தகவல் தெரியவரவே ஊரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ம.பி. முன்னாள் முதல்வர் கமல் நாத், பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று குற்றஞ்சாட்டினார். அந்தச் சிறுவனின் புகைப்படம் இணையத்தில் பரவ மருத்துவர் லோகேஷ் குமார் மீது மக்கள் வசை பாடி வருகின்றனர். சிறுவனின் உயிரைக் கூட காப்பாற்ற முடியாது அரசில் சுகாதார அமைச்சர் எதற்கு அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காயத்திற்கு காண்டம்:
கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதில், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் தடுப்பூசித் திட்டத்தை சமாளிப்பது எப்படி என்பதற்கு இந்தியா முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
ஹீல் இன் இந்தியா திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து இந்தியாவை மருத்துவ சுற்றுலா தலமாகவும் மாற்ற அரசு திட்டமிட்டு வருகிறது.
இதே வேளையில் தான் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சிகரமான சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவார் ரேஷ்மா பாய். இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டர் சமுதாய மருத்துவநலக் கூடத்திற்கு வந்துள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த செவிலி தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க காண்டம் அட்டையை வைத்து ஒட்டி அதன் மீது கட்டுப்போட்டு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் செல்லுமாறு சொல்லியுள்ளார்.
மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரேஷ்மா பாயின் தலையில் இருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்த மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரேஷ்மா பாயின் தலையில் காண்டம் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டி இருந்தது. இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் வீட்டில் பூஜையில் பிஸியாக இருந்துள்ளார்.