ஹோட்டல் அறையில் மயங்கி விழுந்து மூத்த பத்திரிகையாளர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
ஆங்கில நாளிதழின் மூத்த விளையாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவர் மாரடைப்பால் இந்தூரில் உயிரிழந்ததாக மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் (MPCA) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழின் மூத்த விளையாட்டுப் பத்திரிக்கையாளர் ஒருவர் மாரடைப்பால் இந்தூரில் உயிரிழந்ததாக மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் (MPCA) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளர்:
இந்து நாளிதழின் மூத்த துணை ஆசிரியர் எஸ்.தினகர் (57) நேற்று விஜய் நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பத்திரிகையாளரின் மரணத்திற்கு மாரடைப்பு முதன்மையான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் கிடைத்த பிறகு கருத்து தெரிவிப்பதாக காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) சம்பத் உபாத்யாய் தெரிவித்தார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தூரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியை செய்தியாக வழங்கினார் தினகரன் , மார்ச் 9 ஆம் தேதி தொடங்கும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்காக இன்று காலை அகமதாபாத்திற்கு தினகர் புறப்படவிருந்ததாகவும் சக ஊழியர் கூறினார்.
முன்னாள் பிசிசிஐ செயலாளர் சஞ்சய் ஜக்டேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இந்தூரின் முன்னாள் ஹோல்கர்ஸ் கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான ஆட்டம் குறித்து என்னிடம் தினகர் பேசினார் ஒரு நேர்காணலுக்காக தம்மை சந்திக்க தினகரன் வரவிருந்ததாகவும், பின்னர் தொலைபேசியில் பேச முடிவு செய்ததாகவும்” அவர் கூறினார்.