Ind - Eng Trade Deal: இந்தியாவுடனான ஒப்பந்தம் ரிஷி சுனக்கின் மனைவிக்காகவா? யாருக்கு ஆதாயம்? - கேள்வி எழுப்பும் இங்கிலாந்து எம்பி
Ind - Eng Trade Deal: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே கையெழுத்து ஆகவுள்ள தடையற்ற வர்த்தகத்தால் லாபம் அடையப்போவது இந்தியாவா...இங்கிலாந்தா...இல்லை இன்ஃபோஸீச்சா என கேள்வி எழுப்பியுள்ளார் எம்.பி ஜோன்ஸ்
இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் தங்களின் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த தடையற்ற வர்த்தகத்தை ஒப்பந்தமாக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியின் அக்ஷ்தா மூர்த்தியின் நிறுவனமான இன்ஃபோசிஸ் அதிகளவில் பலன் அடைய உள்ளதாக இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சியின் எம்.பி டேரன் ஜோன்ஸ் குற்றம் சாடியுள்ளார். அதே போல் இரு நாட்டின் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்ச்சு வார்த்தை நடக்கும் போது இரு நாட்டு இடையே வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள கூடாது என்றார். இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:
பிரபல நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாரயண மூர்த்தியின் மகள் தான் அக்ஷதா மூர்த்தி. இவர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கை கடந்த 2019 திருமணம் செய்து கொண்டார். இவரின் பெயரில் பல கோடி மதிப்பிலான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் உள்ளன. தற்போது, இந்திய - பிரிட்டன் நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை ஏற்படுத்த பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அதிகபடியான லாபம் அவரின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் நிறுவனத்திற்கு போகுமோ என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், இது குறித்து தெளிவான விளக்கத்தை ரிஷி சுனக்கிடம் கேட்க எதிர்கட்சிகளும், வர்த்தக நிபுணர்களும் திட்டமிட்டுள்ளனர்.
எம்.பி ஜோன்ஸ் அதிரடி:
இது குறித்து இங்கிலாந்து எம்.பி டேரன் ஜோன்ஸ் கூறுகையில் “இந்தியாவுடனான வர்த்தகத்தில் இங்கிலாந்து பிரதமரின் குடும்பத்தினர் ஆதாயம் அடைய உள்ளதா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கத்தை பிரதமர் அளிக்க வேண்டும். அதோடு, அடுத்த மாதம் ஜி20 மாநாட்டை நடத்த இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதன் மாநாடு அடுத்த மாதம் செப்டம்பரில் டில்லியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளார். அதன்படி, இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக தொடர்பு பேச்சுவார்த்தை நடக்கும் போது ஒரு நாட்டின் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தும் நாட்டுற்கு எந்வொரு பயணமும் மேற்கொள்ள கூடாது. ஒப்பந்தம் கைழுத்து ஆன பிறகே பிரதமர் ரிஷி சுனக் இந்தியா செல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒப்பந்தம் வெளிப்படை தன்னைமையுடன் கையொப்பமாவதை அவர் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இந்த ஒப்பந்தமானது இரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும் அதோடு, அதிகரித்த முதலீடுகள், குறைக்கப்பட்ட வர்த்தகத் தடைகள் மற்றும் அதிக சந்தை அணுகலுக்கு உகந்த சூழலை இது உருவாக்கும் என கணிக்கப்படுகிறது