ஆட்டோ, பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து... பதைபதைக்க வைத்த சம்பவம்
மேற்கு வங்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆட்டோரிக்ஷாவும் அரசுப் போக்குவரத்துப் பேருந்தும் மோதிக்கொண்டதில் 8 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் பிர்பூம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆட்டோரிக்ஷாவும் அரசுப் போக்குவரத்துப் பேருந்தும் மோதிக்கொண்டதில் 8 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Anguished by the loss of lives due to a tragic accident in Birbhum district of West Bengal. Prayers with the injured.
— PMO India (@PMOIndia) August 9, 2022
Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased and the injured would be given Rs. 50,000: PM @narendramodi
ராம்பூர்ஹாட் அருகே உள்ள மல்லர்பூரில், தெற்கு வங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மீது, ஆட்டோரிக்ஷா நேருக்கு நேர் மோதியது. விபத்துக்குள்ளான ரிக்சாவில் அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிர்பூம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாகேந்திர நாத் திரிபாதி கூறுகையில், எட்டு பெண்களும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் என்றும், பலியான ஒன்பதாவது பெண் அதன் ஓட்டுனர் என்றும் கூறினார். பெண்கள் நெல் வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.
Horrific accident at Mallarpur in Birbhum district. Tragic loss of lives as nine passengers; most of them women, died when an autorickshaw collided with a Government bus head-on.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 9, 2022
Heartfelt condolences to their near & dear ones.
I demand compensation for the victims' families.
"அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும். பேருந்து, அறம்பாக்கிலிருந்து துர்காபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மோதி விபத்துக்குள்ளானது" என்று போலீஸ் அலுவலர் கூறினார்.
ஆட்டோவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்திய போதிலும், அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிப்பது தொடர் கதையாகி வருகிறது. முறையான விதிகள் விதிக்கப்பட்டு அவை பின்பற்றப்படுகிறதா என்பதை போக்குவரத்து காவல்துறை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Nine killed in head-on collision between government bus and auto in Bengal's Birbhum#birbhum #ACCIDENT #death #bengal https://t.co/qFeS4uvBr2
— The Telegraph (@ttindia) August 9, 2022
உலகில் அதிக விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. பெரும்பாலும் கவனக்குறைவின் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இனியாவது, விதிகளை பின்பற்றி இதுபோன்ற விபத்துகளை குறைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்