மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: 20 மாவட்டங்களில் இன்று கனமழை.. எய்ம்ஸுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அளவிலும், இந்தியா அளவிலும் உலக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் - சுகாதாரத்துறை உத்தரவு
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பித்திற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டிப்பு
- தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக அரசு நிலைநாட்டும் - இபிஎஸ்க்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
- தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலையை அடுத்துள்ள அத்திப்பள்ளம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
- கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் தொடர்ந்து 3வது நாளாக 10 செ.மீ மழை பெய்துள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் India Skills 2024 போட்டியில் 40 பதக்கங்களை வென்றன.
- தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 49.75% நீர் இருப்பு உள்ளது.
- பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- புதுக்கோட்டை: விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
இந்தியா:
- 5ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 49 தொகுதிகளில் 58% வாக்குப்பதிவு
- அதானி - அம்பானி குறித்து பேசுவதில்லை, ராகுலின் திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன என்று பிரதமர் மோடி கேள்வி
- 428 தொகுதிகளில் தேர்தல் நிறைவு; பிரதமர் மோடி வெளியேற இன்னும் 15 நாள்தான் என காங்கிரஸ் கட்சி உற்சாகம்
- அகமதாபாத் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து, 18 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழ்நாட்டின் அமராவதி ஆற்றின் கிளை நதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசாங்கம் தடுப்பணை கட்டிவருகிறது.
உலகம்:
- அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு; இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்
- 4வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்
- ஈரானில் இடைக்கால அதிபராக முகமது முக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிறை தண்டனை பெற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜாக்கோப் ஸூமா தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் புதிய அதிபர் வில்லியம் லாய் எச்சரித்தார்.
விளையாட்டு:
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார்.
- ஐபிஎல் 2024 முதலாவது தகுதிச்சுற்று: கொல்கத்தா - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை
- தனக்கு இரண்டு மாதங்கள் மட்டும் கால அவகாசம் கொடுங்கள் என்று தனது ஓய்வு குறித்து சிஎஸ்கே நிர்வாகத்திடம் எம்.எஸ்.தோனி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion