மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: 39 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது தேர்தல்.. மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு.. இன்றைய ஹெட்லைன்ஸ்
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- மக்களவைத் தேர்தலில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது.
- மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்.
- தேனி வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- வன்முறை நடக்கும் என்று தெரிந்தே மணிப்பூரில் தேர்தல் நடத்தியதாக திருமாளவன் குற்றச்சாட்டு.
- தேர்தல் முடிவுகள் வெளியாகும் வருகின்ற ஜூன் 4ம் தேதி அதிமுகவினர் திருந்த வாய்ப்பாக அமையும் - சசிகலா.
- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிகளை ஆணையம் தொடர்வது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் சூரி வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.
- தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபார்ன்ஹீட் வெயில் கொளுத்தியது.
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
இந்தியா:
- மணிப்பூர் மாநிலம் தமன்போக்பி வாக்குச்சாவடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்.
- கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் வாக்களிக்காமல் பொதுமக்கள் புறக்கணிப்பு.
- தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
- குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் அமித் ஷா வேட்புமனு தாக்கல் செய்தார்.
- காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த ஆலங்கட்டி மழை பெய்தது.
- தேர்தல் ஆண்டில் நிதிநிலையை இந்தியா சிறப்பாக கையாண்டு உள்ளது - ஐ.எம்.எஃப் பாராட்டு.
- மோசடி வழக்கு - எஸ் வங்கி துணை நிறுவனர் ராணா கபூருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
- சத்தீஸ்கர்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பாதுகாப்புப் பணி வீரர் உயிரிழப்பு.
- நடப்பு கோடை காலத்திற்கு நாடு முழுவதும் 9, 111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு - ரயில்வே அமைச்சகம்.
உலகம்:
- ஹமாஸ் வசம் உள்ள பணயக் கைதிகளை மீட்கக் கோரி இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்.
- மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து.
- ஸ்காட்லாந்தில் உள்ள அருவியில் குளித்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு.
- பாகிஸ்தான்: முர்தசா சோரங்கி அருகே ஜப்பானியர்கள் பயணம் செய்த வேன் மீது குண்டு வீச்சு.
- சிரியாவில் அரசு ஆதரவு படையினர் சென்ற பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு.
- ஈரான் நாட்டின் விமானதளம் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்.
- காசா: ராஃபா நகரில் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் கூடுதல் ஆயுதங்கள் குவிப்பு.
- ரஷ்யா: நவால்னி மனைவி யூலியா நவல்னாயாவுக்கு ஜெர்மன் நாட்டின் இதழியல் விருது வழங்கப்பட்டது.
- சீனா: கடல் அடியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க உலகின் மிக நீளமான எந்திரம் உருவாக்கம்.
- அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு டிரம்ப் பணம் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்க குழு அமைப்பு.
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: ஹைதராபாத் - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை.
- பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்.
- ஐபிஎல் 2024: சென்னை அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி.
- கடந்த 2022ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து, 8 பேரை நீக்கம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion