மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நாளை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு.. 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனல் பறந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்
- இந்தியாவின் வெற்றிக் கணக்கு தமிழ்நாட்டில் தொடங்கி எழுதப்படட்டும் - கடைசி கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- பொதுமக்களும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டுகள் தண்டனை - தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்; ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனை என அதிகாரிகள் தகவல்
- தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறையே கிடையாது; உச்சி வெயிலை விட கொடுமையானது பாஜக அரசு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாடு, புதுச்சேரியின் இன்று மற்றும் நாளை வெப்ப அலைகள் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33வது முறையாக நீட்டிப்பு
- சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை எடுத்து செல்லப்படும் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
- திமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபத்தை வேளாண்மை கல்லூரியாக மாற்றியதுதான் ஒரே சாதனை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- வெற்றி பெற்றால் 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி - பாரிவேந்தர் உறுதி
- நாளை வாக்குப்பதிவு என்பதால் தமிழ்நாட்டில் நேற்றி முதல் கூடுதலாக 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது - தமிழ்நாடு போக்குவரத்து கழகம்
- இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன என இயக்குநர் த.செ.ஞானவேல் பதிவிட்டுள்ளார்.
இந்தியா:
- காஷ்மீர் படகு விபத்து - 6 பேர் உயிரிழப்பு.
- காஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு.
- அனைத்து இட ஒதுக்கீடுகளையும் பறிப்பதுதான் மோடியின் நோக்கம் என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு.
- ஒடிசா சட்டமன்ற தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகள் போட்டியிடுவதாக அறிவிப்பு.
- பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, மக்களவையில் அடியெடுத்து வைப்பார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில்: ஒடிசாவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.
- குஜராத்தில் டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு
- காங்கிரசுக்கும் திமுகவிற்கும் குடும்ப ஆட்சி தான் முக்கியம். குடும்ப ஆட்சியை தான் முதலில் கவனிப்பார்கள். பாஜகவிற்கு அப்படியல்ல - அமைச்சர் ராஜ்நாத் சிங்
உலகம்:
- அமெரிக்காவில் பெண் டாக்ஸி டிரைவர் சுட்டுக்கொலை.
- இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு.
- 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்: ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக வெள்ள நீர் சாலைகளில் இருந்து வருகிறது.
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஐபிஎல் 2024: இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் நேருக்குநேர் மோதுகின்றன
- இந்தியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் 15 வயதே ஆன வங்கதேச வீராங்கனை ஹபீபாவிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion