மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான, இன்றைய முக்கிய செய்திகள் இதோ!
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் - திமுக எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவும் உத்தரவு
- தமிழ்நாடு சட்டப்பேரவ கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது - 19ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மீண்டும் அல்வா கிண்டியுள்ளது - அமைச்சர் உதயநிதி விமர்சனம்
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விவகாரத்தில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்
- சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
- நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தனித்து போட்டியில்லை - பாமக திட்டவட்டம்
- பாம்பன் புதிய ரயில் பால பணியின் போது விபத்து - 3 தொழிலாளர்கள் காயம்
இந்தியா:
- பிரதமர் மோடியின் 2.0 அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிப்பு
- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் - கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கு இன்று விசாரண
- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
- ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி சென்னைக்கு கொண்டு செல்ல முயன்ற ரூ.7.23 கோடி பறிமுதல் - 15 பேரை பிடித்து காவல்துறை விசாரணை
- மத்திய அரச்ன் இடைக்கால பட்ஜெட் நேர்மறயானதும் வரவேற்கத்தக்கது - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
- இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் மூடப்பட்ட 566 சாலைகள் - மின் விநியோகம் பாதிப்பு
உலகம்:
- ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்து
- மெக்ச்கோவில் பேருந்து - லாரி மோதி விபத்து - 19 பேர் பலி
- ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களிம் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு
- அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் ஸ்ரேயாஷ் ரெட்டி என்பவர் கொலை - தொடர் சம்பவங்களால் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி
- 31 MQ-9B ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய, அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விளையாட்டு:
- இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது - முதல் போட்டி தோல்விக்கு பழிதீர்க்குமா இந்தியா?
- ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் - அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் நேபாளத்துடன் இந்தியா இன்று மோதல்
- தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion