India Corona Spike: இந்தியாவில் மேலும் 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 40 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
COVID-19 | India records 7,171 new cases in 24 hours; Active caseload at 51,314
— ANI (@ANI) April 29, 2023
இந்தியாவில் இரண்டு வாரங்களுக்கு முன் 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு 12,591 உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது. நேற்றைய தினம் 7,533 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கிடு கிடுவென உயர்ந்து 7,171 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,000 மாக குறைந்துள்ளது.
இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,43,56,693 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,468 ல் இருந்து 5,31,508 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,852 லிருந்து 51,314 ஆக குறைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 11,811 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 4717 பேர், தலைநகர் டெல்லியில் 3853 பேர், உத்திர பிரதேசத்தில் – 3239 பேர், தமிழ்நாடு – 3126 பேர், ஹரியானாவில் – 3963 பேர், குஜராத்தில் – 1396 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 51,314 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,94,134 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6 பேர், கர்நாடகாவில் 2 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர், தமிழ்நாட்டில் 2 பேர் என மொத்தம் 40 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவது போல, தமிழ்நாடிலும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில்ம் கடந்த 24 மணி நேரத்தில் 343 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 527 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 3,126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )