மேலும் அறிய

திருவாரூரில் முழு ஊரடங்கில் வெளியில் சுற்றியதாக 827 வழக்குகள் பதிவு

ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவை மீறி வாகனங்களில்  தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை

ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக நாள் தோறும் இரவு நேர ஊரடங்கையும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்தாண்டின் முதல் முழுநாள் ஊரடங்கு ஞாயிற்று கிழமையான நேற்றையதினம் அமல் படுத்தப்பட்டது. இந்த  நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, குடவாசல், வலங்கைமான், நன்னிலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள  வணிக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகளில் பொது போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியில் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் சில இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறையை மீறி சாலையில் சுற்றி திரிந்தனர்.  உரிய காரணங்கள் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர். போலீசார் வாகன சோதனையில் திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா என காவல்துறையினர் சோதனை செய்து பின் அனுப்பி வைத்தனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினர்.

திருவாரூரில் முழு ஊரடங்கில் வெளியில் சுற்றியதாக 827 வழக்குகள் பதிவு
 
இதனை அடுத்து கொரோனா ஒமிக்ரான்  பரவலை முற்றிலும் தடுக்கவும், பொதுமக்களின் தேவையில்லாத நடமாட்டத்தை குறைக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்  உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட எல்லைகளில் 30 சோதனைச் சாவடிகள் 40 நிலையான ரோந்துகள், 34 இருசக்கர வாகன ரோந்துகள், 5 நெடுஞ்சாலை ரோந்துகள் அமைத்து மாவட்டம் முழுவதும் தொடர் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.பாதுகாப்பு மற்றும் சோதனை பணியில் சுமார் 600 காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் அரசின் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் தன் குடும்பத்தின் மீது அக்கறையில்லாமல் முக்கவசம் அணியாமல் காரணமின்றி வெளியில் சுற்றித்திரிந்த 147 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூரில் முழு ஊரடங்கில் வெளியில் சுற்றியதாக 827 வழக்குகள் பதிவு
 
மேலும் விதிகளை மீறி வாகனங்களை இயக்கியது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 680  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊரடங்கு அறிவிக்கும் காலங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அரசின் உத்தரவை அமல்படுத்த ஒத்துழைப்பு நல்க வேண்டும், மேலும் அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் இதனை தொடர்ந்து இனிவரும் ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவை மீறி வாகனங்களில்  தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை செய்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதம் மாறியோர் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?
மதம் மாறியோர் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Embed widget