அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை மையம்
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 27 மாவட்டங்களில் வெப்பநிலை உயர்வால் அனல்காற்று வீசுவது தொடரும். மேலும்,. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 4-ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதனால், முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வதை பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ‘நாளை முதல் வரும் 6ம் தேதி வரை தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.