'அது எங்க வீடுங்க!' டூர் போய்ட்டுவந்த பேமிலிக்கு ஷாக் கொடுத்த வாடகைதாரர்கள்!
வெயில் கொளுத்தும் நிலையில் தங்களுடைய சொந்த வீட்டில் ஓய்வெடுக்க முடியாத நிலை இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ட்ராவல் மீது ஆர்வம் கொண்ட நீங்கள் சில மாதங்கள் குடும்பத்துடன் ஊர்சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்புகிறீர்கள். அப்போது உங்களது வீட்டை ஏற்கெனவே வாடகை இருந்தவர்கள் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வீர்கள்? அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வீர்கள்? சற்று ஷாக்கான விஷயம்தானே. இப்படியான ஒரு சம்பவம் துபாயில் நடந்துள்ளது.
துபாயைச் சேர்ந்த கேன்ஸ் ப்ருக்ஸ் மற்றும் கர்னா தம்பதி தங்களுடைய ஒரு வயது மற்றும் 9 மாதக்குழந்தையுடன் அங்கு வசித்து வந்துள்ளனர். சுற்றுலாவில் ஆர்வம் கொண்ட அவர்கள் சில மாதங்கள் சில நாடுகளுக்கு சுற்றிவிட்டு மீண்டும் ஊருக்குச்சென்றுள்ளனர். அங்கே தங்களுடைய வீட்டை வாடகைக்கு குடி இருந்தவர்கள் பூட்டுபோட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் கேன்ஸ் - கர்னா தம்பதி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வெயில் கொளுத்தும் நிலையில் தங்களுடைய சொந்த வீட்டில் ஓய்வெடுக்க முடியாத நிலை இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : AsiaCup 2022: ஆசிய கோப்பைக்கான அணிகள் தயார்.. கோப்பையை வெல்ல எந்த அணிக்கு வாய்ப்பு!
மேலும் படிக்க : Watch Video : துருக்கியில் இரு வேறு பகுதிகளில் கோர விபத்து.! 32 பேர் பரிதாப உயிரிழப்பு.!
இது குறித்து அந்த தம்பதி தற்போது போலீசாரிடமும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த கேன்ஸ்-கர்னா தம்பதி, '' என்னுடைய ஒரு வயது குழந்தை வெப்பம் தாங்காமல் அழுகிறது. அனைவருமே சோர்வில் இருக்கிறோம். என்னுடைய 9 மாதக்குழந்தைமீது சாலையில் சென்ற கார் மோதிவிட்டது. நல்ல வேளையாக பெரிய காயம் ஏதுமில்லை. எங்களுக்கு நடப்பதுபோல யாருக்குமே நடக்கக்கூடாது. போலீசார் உதவியுடன் நாங்கள் எங்கள் வீட்டை மீட்க போராடுகிறோம்.
இந்த போராட்டங்களுக்கு இடையே தற்போது நண்பர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். சட்டப்போராட்டத்தின்படி இதுவரை வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 8 நோட்டீஸை அனுப்பியுள்ளனர் கேன்ஸ்-கர்னா தம்பதி. ஜூன் மாதத்துக்குள் காலி செய்ய வேண்டுமென அப்போதே தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னமும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை தெரிவித்து தங்களுடைய தங்கும் செலவுக்காக அந்த தம்பதி GoFundMe நிதி வசூலையும் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க : India Economic Growth: தொடரும் உலகளாவிய அதிர்வுகள்...நீடித்த வளர்ச்சியில் இந்தியா பொருளாதாரம்...ரிசர்வ் வங்கி விளக்கம்
இப்படி ஒரு சம்பவம் என்றால் அமெரிக்காவில் பெற்ற மகளிடமே வீட்டுக்கு வாடகை வசூலித்த தாயின் செய்தியும் வைரலானது. அமெரிக்காவின் ஒக்லஹாமாவைச் சேர்ந்த தாய் ஒருவர் பின்னணியில் கீட்டோ ஆன்தமில் வரும் ஹார்ட் க்னாக் லைஃப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, தனது 18 வயது மகள் ஒப்பந்தப்பத்திரத்தில் கையெழுத்திடும் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றிக்காக கட்டமைத்துக் கொண்டிருக்கின்றேன் என்று குறிப்பிட்டு அதனைப் பகிர்ந்துள்ளார். 6 குழந்தைகளுக்குத் தாயான அவர் தனது 18 வயது மகள் ஜடா, இந்த ஒப்பந்தத்தின் படி மாதம் 100 டாலர்களை அவரது எதிர்காலத்திற்கு தயாராவதற்காக தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்த தாயின் செயல் சரி செய்யவே முடியாத நீண்ட கால விரிசலுக்கு இந்த ஒப்பந்தம் வழி செய்துவிடும் என்று பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் கமெண்ட் செய்துள்ள ஒருவர் “எனது தாய் எனக்கு இப்படி செய்திருந்தால் அது எனக்கு மயக்கத்தையே கொடுத்திருக்கும்.” என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் “என் தாய் இதை எனக்குச் செய்திருந்தால் அதன் பின்னர் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்திருக்கவே மாட்டோம்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஜடாவின் தாய் விளக்கமளித்து மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 16 வயதில் நான் ஒற்றைத் தாயாக இருந்தேன். எனது பெற்றோர்கள் எனது வெற்றிக்காக எதையுமே செய்யவில்லை. எனக்கு தற்போது கிடைத்திருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் அவ்வளவுப் போராடியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தன் குழந்தைகள் தன்னை சார்ந்து வாழக்கூடாது என்பதற்காகவும், உண்மையான உலகத்தை எதிர்கொள்ள தனது மகளை தயார் படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஜடா கையெழுத்து போட்டது கார் கட்டணத்திற்காகவோ, இன்ஸ்யூரன்ஸ் கட்டணத்திற்காகவோ, செல்ஃபோன் பில்லுக்காகவோ அல்ல. அது அவர் தங்கியிருக்கும் ரூம், உணவு மற்றும் இதர விஷயங்களுக்காக தான் கொடுக்கவேண்டும் என்று கூறியிருப்பதாக ஜடாவின் தாய் கூறியுள்ளார்.