சரியான உணவும் உடற்பயிற்சியும் இல்லையென்றால் மேலும் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு
இந்தியாவில் 2030-ஆம் ஆண்டிற்குள் மேலும் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உருவாகும் வாய்ப்புள்ளது ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
மனிதர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட, உடலுக்கு போதுமான உடற்பயிற்சியின்மையே முக்கிய காரணமாக உள்ளது. சர்க்கரை நோயானது 180 -190 வரை இருந்தால், மாத்திரைகள் எடுத்து மக்களை நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியாது. இந்தியாவில் தற்போது மூன்று கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்பானது இன்னும் ஆறு ஆண்டுகளில் அதாவது 2030-ஆம் ஆண்டுக்குள் நாலு கோடியாக அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறப்படுகின்றன. சர்க்கரை நோய் பாதிப்பிற்கு உடலுக்கு போதுமான உடற்பயிற்சி இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது. கடந்த காலங்களில் சர்க்கரை நோய் பாதிப்பு என்பது ஐம்பது வயதை கடந்தவர்களுக்கே வந்தது. ஆனால் தற்போது 30 வயது உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்ற வேண்டும். வீட்டின் அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு கூட நடந்து செல்லாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. இதனால் உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறை குழந்தைகள் படிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் விளையாட்டு மக்களுக்கு தெரிவதில்லை.
பிற மருத்துவ பாதிப்புகளுக்கு மருத்துவமனை வந்து பரிசோதிக்கும்போதே பாதிப்பை கண்டறிகின்றனர். இதன் பாதிப்பு வந்தால், உடல் சோர்வு, சிறுநீர் அதிகம் போகுதல், தொடர்ச்சியாக உடல் எடை குறைவு, இரவில் அடிக்கடி சிறு நீர் கழித்தல் போன்றவை சக்கரை நோயின் அறிகுறிகள் ஆகும். மேலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை, கொலஸ்ட்ரால், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் உள்ள அடிப்படை பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். 180- 190 வரை இருந்தால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள தேவையில்லை.
சரியான உணவு, உடல், எடை பராமரிப்பு உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். நாம் எவ்வளவு உணவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். தற்போது பொதுமக்கள் அரிசியை அதிகமாக உணவாக எடுத்துக் கொள்கின்றனர். சர்க்கரை நோய்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
மேலும் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியாது. சரியான உடற்பயிற்சி சரியான உணவு, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து சாப்பிடுவது, புரதம் எடுப்பது, கொழுப்புச் சத்து உணவுகளை குறைத்து சாப்பிடுவது, பழங்கள், சிறுதானிய உணவுகள் மற்றும் சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கட்டுக்குள் வர முடியும். கனமான உணவுகளான அடை போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
குறிப்பாக மாவுச்சத்து 60%, புரதம் 20%, கொழுப்பு சத்து 20 சதவீதம் என்ற அடிப்படையில் சாப்பிட வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகள் எடுக்கும்போது கட்டுக்குள் வரும். தினமும் எட்டு மணிநேரம் நன்கு தூங்க வேண்டும். அதேபோல் குறைந்த பட்சம் அரை மணி நேரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை முறையாக செய்து வரும் பட்சத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமாக நாம் மருத்துவர்கள் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மக்களிடம் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு போன்றவை இல்லாமல் இருப்பதால் வருகின்ற 2020க்குள் மேலும் ஒரு கோடி பேருக்கு இந்தியாவில் சக்கர நோய் பாதிப்பு உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.