தமிழகத்தில் 14வது இடம் பிடித்த தர்மபுரி வனக்கோட்டம் - எதனால் தெரியுமா?
தர்மபுரி வனக்கோட்டத்தில் 64 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழக அளவில் 14 வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு பணி முடிவுகளின் படி தர்மபுரி வனக்கோட்டத்தில் 64 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழக அளவில் 14 வது இடத்தை பிடித்துள்ளது.
தென்னிந்தியாவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மே 23-ஆம் தேதி தொடங்கி 25 -ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்தது மாநில வனத்துறை சார்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்தது.
யானைகளின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த வகையில் தர்மபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய மூன்று வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று நாட்கள் நடந்தது.
இரண்டு ஏசிஎப் மேற்பார்வையில் கணக்கெடுப்பு பணி
தர்மபுரி வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 2 ஏசிஎப் மேற்பார்வையில் மூன்று வனச்சரகர்கள் அடங்கிய வனத்துறையினர் 15 குழுக்களாக பிரிந்து 70 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரி வன கோட்டத்தில் உள்ள ஒகேனக்கல் பென்னாகரம் பாலக்கோடு வனச்சரகத்தில் 15 வனக்காவல் சுற்று வீடுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கடந்த மே 23-ஆம் தேதி அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் நடமாடுவதை நேரில் பார்த்து கணக்கெடுக்கப்பட்டது.
மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட யானை கணக்கெடுப்பு பணி
பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில் கூட்டமாகவும், தனியாகவும் யானைகள் நின்று கொண்டிருந்தது. அவற்றை வனத்துறையினர் புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்தனர். மே 24-ஆம் தேதி சாணம், லத்தி, கால் தடம் வைத்து யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. 25-ஆம் தேதி வனத்தில் உள்ள தடுப்பணைகள், குட்டை, ஏரி, ஆற்றுக் கால்வாய் மற்றும் தண்ணீர் குடிக்க வரும் தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நேரில் பார்த்து யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் நேரடியாக யானைகளை பார்த்து கணக்கெடுத்த வகையில் 64 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் தர்மபுரி வனக்கோட்டம் 14-வது இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆந்திரா மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி கடந்த மே மாதம் 3 நாட்கள் நடந்தது. தர்மபுரி வனக்கோட்டத்தில் உள்ள 15 வன காவல் சுற்று வீடுகளில் 70 பேர் கொண்ட குழுவினர் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
வழிகாட்ட ஏதுவாக வாட்ஸப் குழு அமைக்கப்பட்டது
வனத்தில் வழிகாட்ட ஏதுவாக வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் கடந்த மே 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
யானைகளை நேரில் பார்த்தும் அதன் கால் தடங்கல் மற்றும் சாணத்தின் மூலமாகவும் கணக்கெடுப்பு நடத்தியதில் 14 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதில் நேரடியாக 64 யானைகளையும் பார்த்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நேரடியாக பார்த்த வகையில் 64 யானைகளுடன் தர்மபுரி வனக்கோட்ட கோட்டம் 14வது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.