Cyclone Asani: அசானி புயல் எதிரொலி - அந்தமான் நிக்கோபாரில் வெளுத்து வாங்கும் மழை..!
அந்தமான் நிக்கோபார் பகுதியில் கனமழை தொடங்கியது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department- IMD) முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கனமழை பெய்து வருகிறது. நாளை புயலாக வலுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதன் காரணமாக அந்தமான் நிக்கோபாரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வடக்கு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அசானி புயல் மேலும் தீவிரம் அடையும் என்பதால், தேசிய பேரிசர் மீட்புக் குழு சார்பில் 100 வீரர்களுக்கு மேல் 6 மீட்பு குழுக்கள் பல பகுதிகளில் அமைகப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு, இந்திய கடலோர காவல்படையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
Even as heavy rainfall lashed Nicobar Islands during the last 24 hours, the Centre on Saturday deployed six teams of the National Disaster Rescue Force (@NDRFHQ) in view of the impending #CycloneAsani near the Andaman and Nicobar Islands on March 21.#AndamanFightsCycloneAsani pic.twitter.com/rMDDHxDMq3
— IANS (@ians_india) March 19, 2022
RJ Balaji: ரசிகரின் கேள்வியால் கொதித்த ஆர்ஜே பாலாஜி
Jacqueline Fernandez : ஜாக்குலின் பெர்னாண்டோஸ் ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்..!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த சிக்கல்... முதல் போட்டிக்கு மொயின் அலி சந்தேகம்?-ஏன்?
Nadigar Sangam Election: “வாக்கு எண்ணிக்கையில் திருப்தி இல்லை” - கே. பாக்யராஜ் பகிரங்க குற்றச்சாட்டு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்