மேலும் அறிய
அதிகரிக்கும் கொரோனா: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் தொடருமா..?
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான தமிழக அரசின் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

மாதிரி படம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்தாண்டு இறுதியில், கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதனால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.

இந்நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான தமிழக அரசின் ஊரடங்கு அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதில், அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளன என்ற விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
சேலம்
தஞ்சாவூர்
தமிழ்நாடு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















