மேலும் அறிய

ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானைகள் ; நொடிப்பொழுதில் உயிர் தப்பிய குடும்பம்

வீட்டின் அருகே வந்த மூன்று யானைகளில் ஒரு யானை 10அடி அகலம் உள்ள வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது. அந்த யானை அங்கேயே உணவுப் பொருட்களை தேடியபடி நின்றது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள்  நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மனித வனவிலங்குகள் மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளை ஒட்டிய கிராமப்பகுதிகளுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த பன்னிமடை பகுதியில் தெப்பனூர் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்நிலையில் நேற்று பணிகள் முடிந்த நிலையில், வசந்த் தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார். இரவு 9 மணி அளவில் ஊருக்குள் யானைகள் புகுந்ததாக தகவல் வந்ததை அடுத்து வசந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவுகளை தாழிட்டுக் கொண்டு உள்ளே டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே வந்த மூன்று யானைகளில் ஒரு யானை 10அடி அகலம் உள்ள வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது.

ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானைகள் ; நொடிப்பொழுதில் உயிர் தப்பிய குடும்பம்

இதனை அடுத்து வசந்த் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அருகில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டுக்குள் இருந்த யானை அங்கேயே உணவுப் பொருட்களை தேடியபடி நின்றது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானையை வீட்டிற்குள் இருந்து வெளியே விரட்டினர். பின்னர் மூன்று யானைகளையும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

இது குறித்து வசந்த் கூறுகையில் வரப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த நிலையில், தற்போது வீட்டிற்குள்ளேயும் நுழைந்துள்ளது. அனைவரும் உடனடியாக படுக்கை அறைக்குள் சென்றதால் உயிர்த் தப்பினோம். யானைகள் ஊருக்குள் வரும் முன்னரே அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு நாள்தோறும் கோரிக்கை வைத்து வருகிறோம் எனினும் யானைகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மெட்ரோ பயணிகளே இதை தெரிஞ்சிக்கோங்க! இன்று மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! 
மெட்ரோ பயணிகளே இதை தெரிஞ்சிக்கோங்க! இன்று மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! 
Latest Gold Silver Rate: அதிகரிக்க தொடங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ!
Latest Gold Silver Rate: அதிகரிக்க தொடங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ!
Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு - இன்றைய நிலவரம் இதுதான்!
Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு - இன்றைய நிலவரம் இதுதான்!
Train Cancel: சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க!  ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க! ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மெட்ரோ பயணிகளே இதை தெரிஞ்சிக்கோங்க! இன்று மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! 
மெட்ரோ பயணிகளே இதை தெரிஞ்சிக்கோங்க! இன்று மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! 
Latest Gold Silver Rate: அதிகரிக்க தொடங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ!
Latest Gold Silver Rate: அதிகரிக்க தொடங்கும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ!
Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு - இன்றைய நிலவரம் இதுதான்!
Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு - இன்றைய நிலவரம் இதுதான்!
Train Cancel: சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க!  ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
சென்னை பீச் - தாம்பரம் - செங்கல்பட்டு பயணிகளே கவனிங்க! ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
Modi Vs Rahul: 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?
Modi Vs Rahul: 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?
Aditya L1: சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
RCB Playoff Scenario: வெற்றி என்னவோ டெல்லிக்கு; பயன் என்னவோ ஆர்சிபிக்கு..! பிளேஆஃப்க்கு இதுதான் சான்ஸ்!
வெற்றி என்னவோ டெல்லிக்கு; பயன் என்னவோ ஆர்சிபிக்கு..! பிளேஆஃப்க்கு இதுதான் சான்ஸ்!
EPFO claim: பி.எஃப். பணம் எடுப்பது இனி ரொம்ப சுலபம் - மூன்றே நாட்களில் பணம் பெறலாம்! எப்படி?
EPFO claim: பி.எஃப். பணம் எடுப்பது இனி ரொம்ப சுலபம் - மூன்றே நாட்களில் பணம் பெறலாம்! எப்படி?
Embed widget