மேலும் அறிய

நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை... நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி

யானை ஊருக்குள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளதால் கோவை மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை விரட்டி தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலைக்கு அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானையின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இந்த யானை, அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டுயானை கதிர் நாயக்கன்பாளையம் அருகிலுள்ள ரேணுகாபுரம் பகுதியில் சுற்றித்திரிந்தது. அப்போது அந்த பகுதியில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அங்கு தங்கி வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் வெளியில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனிதரை விரட்டிய ஒற்றைக் காட்டுயானை

அந்த நேரத்தில் யானையை பார்த்த தொழிலாளி, அருகில் இருந்த தனது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்த முயன்றுள்ளார். இதனை கவனித்த யானை திடீரென அவரை விரட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. யானையிடமிருந்து ஓடி தப்பிய அந்த தொழிலாளி, சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், யானை ஊருக்குள் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர், இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், காட்டு யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை, சமையலறையில் இருந்த உணவுப் பொருட்களை சேதப்படுத்தி சென்ற சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget