மேலும் அறிய

தமிழ்நாடு பட்ஜெட்டில், கோவை குறுந்தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

நிதி நிலை அறிக்கையில் கொரோனா நெருக்கடியில் இருந்து தொழில்துறை மீண்டுவரும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும் என கோவை தொழில் முனைவோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வருகின்ற 13-ஆம் தேதி சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் கொரோனா நெருக்கடியில் இருந்து தொழில் துறை மீண்டு வரும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும் என கோவை தொழில் முனைவோர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பாக கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில், கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரி விதிப்பு சட்டங்களின் கீழ் சில தளர்வுகள் அளிப்பது மிகவும் உதவியாக இருக்கும். பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்து வரும் தொழில்கள் தொடர்ந்து நடத்த உதவியாக அமையும். தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டம், மத்திய விற்பனை வரி சட்டம், ஜிஎஸ்டி சட்டங்களில் சில தளர்வுகளை எதிர்பார்க்கிறோம்.


தமிழ்நாடு பட்ஜெட்டில், கோவை குறுந்தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

வாட் மற்றும் ஜிஎஸ்டி நிலுவையில் ஒரு பகுதி வரி செலுத்தும் வகையிலும், வட்டி உள்ளிட்ட தீர்வைகளில் விலக்கு அளிக்கும் வகையில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். வாட், ஜிஎஸ்டி நிலுவையில் உள்ள தணிக்கை விபரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும். மின்சாரம் மற்றும் பெட்ரொலிய பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஜிஎஸ்டி வரியில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் செய்பவர்களுக்கு பதிவு மற்றும் வரி விதிப்பு என உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி தொடர்பாக கோவையில் 'ஏரியா பெஞ்ச்' எனும் முறையீட்டு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிட்ட கால வரையறுக்குள், திரும்பத்தரும் தொகையை பெற வழி வகை செய்ய வேண்டும். 

ஜீலை - ஆகஸ்ட் 2021க்கான ஜிஎஸ்டி, வருமான வரி தொகையை கட்ட மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும். கொரோனா நெருக்கடியில் இருந்து மீளும் வகையில் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை திருப்பி தர வேண்டும் உள்ளிட்டவற்றை அறிவிப்பதன் மூலம் சிறு தொழில்கள் உயர்வு பெறும் வகையில் நிவாரண நடவடிக்கையாக அமையும்" என அவர் தெரிவித்தார்.


தமிழ்நாடு பட்ஜெட்டில், கோவை குறுந்தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "கொரோனா நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குறுந்தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகளை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக குறுந்தொழில் முனைவோர்களுக்கு 4 சதவீத வட்டி என்ற அடிப்படையில் கடன் தர வேண்டும். கொரோனா காலக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். குறுந்தொழில் கூடங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கவேண்டும். குறுந்தொழில்களை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க குறுந்தொழில் வாரியத்தை அமைக்கவேண்டும்" என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
Embed widget