மேலும் அறிய

Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

விஜயகாந்த் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விஜயகாந்தின் உடல், நேற்று காலை முதல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், அது நகரின் முக்கிய இணைப்பு பகுதி என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடன் தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஊர்வலாமாக கொண்டு வரப்பட்டு மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

இந்த நிலையில் கோவையை சேர்ந்த காய்கனிசிற்ப கலைஞர் ஒருவர் விஜயகாந்த் உருவத்தை தர்பூசணி பழத்தில் அச்சு அசலாக செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் என்பவர், கோவை பகுதியில் தங்கியிருந்து காய்கறி அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். காய் கனிகளில் சிற்பங்கள் செதுக்குவதையும் அவர் பொழுது போக்காக கொண்டுள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தர்பூசணி பழத்தில் அவரது உருவத்தை செதுக்கி சந்தோஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், “சிறந்த மனிதர்களில் விஜயகாந்த் ஒருவர். அரசியலில் அவரது துணிவான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 5.5 கிலோ தர்பூசணி பழத்தில், 3.5 மணி நேரம் அவரது உருவத்தை செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளேன்" என்றார்.

இதேபோல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சோற்றில் அவரது உருவ படத்தை வரைந்து யு.எம்.டி. ராஜா என்பவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பசியாறும் சோற்றில் விஜய்காந்தின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார். இது குறித்து யு.எம்.டி. ராஜா கூறுகையில், “ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து முகம் மகிழும் வள்ளலாக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த். இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சல் கலந்து அவருடைய திரு உருவத்தை ஓவியமாக வரைந்தேன். இந்த ஓவியம் நாண்கு மணிநேரம் சமயம் எடுத்து வரைந்து அஞ்சலி செலுத்தினேன்” எனத் தெரிவித்தார்.

Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. தங்க நகை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். இதனிடையே ஓவியங்கள் மற்றும் தங்கத்தில் சிலைகள் வடிவமைப்பதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி பல்வேறு கலை படைப்புகளை உருவாக்குவதை வழக்கமாக செய்து வருகிறார். அதேபோல இவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
IPL RCB vs KKR: மிரட்டும் வானிலை! RCB vs KKR மேட்ச்சில் மழை பெய்தாலும் கவலை வேண்டாம் - என்ன நடக்கும்?
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
உடலுறவு கொள்ள தினமும் ரூ.5000; டிசைன் டிசைனா டார்ச்சர் செய்யும் மனைவி! நீதிமன்றத்துக்கு வந்த கணவர்!
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Embed widget