பேரிடர் காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் துயரங்களை தீர்க்க வேண்டும் - வானதி சீனிவாசன்
மத்திய அரசு மீது பழி போடுவதே மாநில அரசின் செயல்பாடு உள்ளது. தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் டெல்லியில் கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார்.
![பேரிடர் காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் துயரங்களை தீர்க்க வேண்டும் - வானதி சீனிவாசன் Vanathi Srinivasan says state government should work with the central government to solve the woes of the people during calamities - TNN பேரிடர் காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் துயரங்களை தீர்க்க வேண்டும் - வானதி சீனிவாசன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/e65e9996ee5150955e5702f1d7bb00d11680662291940109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை நெசவாளர் காலனி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து இறகுப்பந்து மைதானத்தை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அமைத்துக் கொடுத்துள்ளார். அதனை இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் அங்கு இறகு பந்து சிறிது நேரம் விளையாடினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், “இறகு பந்தாட்டம் மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை மையமாக வைத்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம். மேலும் கால நிலை மாற்றத்தினால் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் வருகிறது. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாம் மேற்கொள்ளவில்லை.
கார்பன் சம நிலை இலக்காக வைத்து உலக நாடுகள் செயல்பட்டு வருகிறது. அதில் இந்தியாவும் கொள்கையுடன் திட்டங்களை எடுத்து வருகின்றனர். கார்பான் சம நிலை அலுவலகம் என முன்னெடுப்பாக தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை மாற்றியுள்ளோம். அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் உருவாக்கி வருகிறோம். இந்தியாவிலே முதல் எம்.எல்.ஏ அலுவலகம் கார்பன் சமநிலை அலுவலகமாக மாற்றுவது எங்கள் இலக்கு என்றார். மேலும் இயற்கை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும். தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக நிதி அளிப்பு குறித்து சொல்லியுள்ளார்.
மத்திய அரசு மீது பழி போடுவதே மாநில அரசின் செயல்பாடு உள்ளது. தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் டெல்லியில் கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார். பண அரசியல் பேசுவதை விட்டுவிட்டு மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும். அமைச்சர் உதய நிதி பேச்சை நான்கு நாட்களாக கவனித்து வருகிறோம். மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆனால் மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றார். பிரதமரை சந்திக்க முதல்வர் செல்லவில்லை. கூட்டணி கூட்டத்திற்கு சென்றவர் பிரதமரை சந்தித்து வருகிறார். அப்பறம் நள்ளிரவில் சந்தித்தார். பிரதமருக்கு நேரம் இருக்கும்போது முதல்வரை சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்தார். திமுக தலைவர்கள் வட மாநில தொழிலாளர்களை தரக்குறைவாக பேசுவது முதல்முறை இல்லை. தொடர்ச்சியாக பேசுவதும் மன்னிப்பு கேட்பதுமாக உள்ளது.
தமிழிசை செளந்தரராஜன் தூத்துகுடியில் ஆய்வு செய்தார்களா? மக்களை பார்த்தாரா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். பின்னர் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி என்பதால் மக்களை சந்தித்து இருப்பார். மக்களை சந்தித்து ஆறுதல் யார் வேண்டுமாலும் கூறலாம் என்றார். உதயநிதி அழுத்தம் காரணமாக தான் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்களா? தேசிய பேரிடர் குழு மீட்பு பணியில் இறங்கியதா? என கேள்வி எழுப்பினார். வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது" என்றார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)