மேலும் அறிய

’பா.ஜ.க சித்தாந்தத்துக்கு ஆதரவானவர்கள் மீது, திமுக அரசு கைது நடவடிக்கை எடுக்கிறது’ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

”பாஜக சித்தாந்தத்திற்கு ஆதரவாக எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திமுகவை விமர்சனம் செய்யும் பா.ஜ.க ஆதவாளர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது"

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்ட மன்ற அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த வாரம் சட்ட மன்றத்தில் பட்ஜெட் தாக்கலின் போது, எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கோவை மக்களுக்கான மெட்ரோ, ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவுபடுத்த நடவடிக்கை இல்லை எனபதையும், ஒரு வருடத்திற்கும் மேலாக புதிய சாலைகள் போடப்படாமல் இருப்பதையும் பதிவு செய்தேன். சட்டமன்றத்தில் என்னை பேச விடாமல் பல்வேறு துறை  அமைச்சர்கள் வரிக்கு வரி இடையூறு செய்தனர். 

நான் சட்டமன்றத்தில் பேசியது தொடர்பான வீடியோக்களை கூட அரசிடம் இருந்து பெற முடியவில்லை. ஆனால் அமைச்சர்களின் வீடியோக்கள் மட்டும் வருகின்றது. தமிழக சட்ட பேரவை நிகழ்வுகள்  முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. ஆனால் கொலுசு மட்டும் கிடைத்தது என்று பேசினேன். அதில் கொலுசு என்ற வார்த்தையை மட்டும் நீக்கிவிட்டனர். சிறு குறு தொழில்களை ஊக்கபடுத்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லை. தமிழக பட்ஜெட்டில் கோவை புறக்கணிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் துபாய் பயணம் விமர்சனம் செய்த நபர் கைது குறித்த கேள்விக்கு, ”பாஜக சித்தாத்திற்கு ஆதரவாக எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திமுகவை விமர்சனம் செய்யும் பா.ஜ.க ஆதவாளர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. ஏபிவிபி அமைப்பின் சுப்பையா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த பெண்ணே சமரசம் ஆகி விட்டோம் என்ற பின்னரும் நடவடிக்கை தொடர்கின்றது” என அவர் பதிலளித்தார். சுப்பையா செய்த செயலை ஆதரிக்கின்றீர்களா என்ற கேள்விக்கு, ”அந்த தவறுக்கு ஆதரவு  கொடுக்கவில்லை. சுப்பையா மீதான வழக்கில் கூடுதல் வழக்கு பிரிவு போடப்பட்டு இந்த அரசு பழி வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. தப்பா இல்லையா என்ற விவகாரத்திற்குள் செல்லவில்லை” என அவர் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசாங்கம் ஏன் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது? விமர்சனம் வைத்தால் ஏன் தாங்க முடியவில்லை. கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்குகின்றதா? மாநில அரசின் நிதி நிலை அறிக்கையில் இலக்கு வைத்ததை செய்ய முடியவில்லை. ஆனால் மத்திய அரசு நிதி வருவாயை பகிர்ந்து அளித்துள்ளது. 24 சதவீதம் உயர்ந்த வரி வருவாயை தமிழகத்திற்கு வழங்கி இருக்கின்றது. மத்திய அரசு வரியை வசூல் செய்து தமிழகத்திற்கு கொடுக்கின்றது. ஆனால் மாநில அரசு நிதி வருவாயை வசூலிக்க  எதுவும் செய்யவில்லை.

சேலம் ஸ்டீல் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து பாஜக லாபத்திற்கு கொண்டு வந்துள்ளது. பஞ்சு விலை உயர்வு குறித்து கடந்த வாரமே மத்திய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Embed widget