தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
Chengalpattu Weather Forecast: "செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது"

TN weather Ditwah Cyclone Latest News (28-11-2025): செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மிக கன மழை, எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது
தித்வா புயல் நிலவரம் Ditwah Cyclone
வானிலை மையம் அறிக்கையின்படி, கடந்த 6 மணி நேரத்தில் கடலோர இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி புயல் திட்வா வடக்கு-வடமேற்கு நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து இன்று, நவம்பர் 28, 2025 அன்று காலை 02.30 மணிக்கு அதே பகுதியில் மையம் கொண்டது.
அட்சரேகை 8.1°N மற்றும் தீர்க்கரேகை 81.2°E, திருகோணமலைக்கு (இலங்கை) தெற்கே சுமார் 50 கிமீ, மட்டக்களப்பிற்கு (இலங்கை) வடமேற்கே 70 கிமீ, ஹம்பாந்தோட்டாவிற்கு (இலங்கை) வடக்கே 220 கிமீ, புதுச்சேரிக்கு (இந்தியா) தென்கிழக்கே 460 கிமீ மற்றும் சென்னைக்கு (இந்தியா) தென்கிழக்கே 560 கிமீ தொலைவில் உள்ளது.
இது இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நவம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை - Chengalpattu Weather Forecast
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (29-11-2025) மற்றும் நாளை மறுநாள் (30-11-2025) ஆகிய இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட் மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு கலர் விடப்பட்டுள்ளது
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாறு, ஏரி மற்றும் குளங்களில் ஆழமான நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேவையில்லாத காரணங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில், அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் வைத்திருக்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும், அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு..
மழைக்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டாரை இயங்கி வருகிறது. புகார் தெரிவிக்க 044-27427412-14 மற்றும் whatsapp மூலம் புகார் தெரிவிக்க 9444272345 ஆகிய எண்களில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.





















