மேலும் அறிய

திருச்செந்தூர் குழந்தை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; கைதாகி உயிரிழந்த பெண் தற்கொலை செய்தது அம்பலம்

கைது செய்யப்பட்ட பாண்டியன் மற்றும் திலகவதி ஆகியோரை ஆலாந்துறை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் வடக்கு டோல்கேட் அருகே கடந்த 5 ம் தேதியன்று பெண்கள் குளிக்கும் இடம் கன்னியாகுமரியை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் 1 1/2 வயது ஆண் குழந்தை ஹரிஷ் காணாமல் போனது. குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், குழந்தை கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துராஜ் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (43) மற்றும் அவரது மனைவி திலகவதி (35) ஆகியோர் குழந்தையை கடத்தி இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் பாண்டியன், திலகவதி ஆகியோர் கோவை ஆலந்துறை பூண்டி சாலையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஆலந்துறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் பூண்டி முட்டத்துவயல், குளத்தேரி அருகே குளித்துக் கொண்டு இருந்த பாண்டியன், திலகவதி ஆகிய இருவரை ஆலாந்துறை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இருவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் குழந்தையை திருடியது ஒப்புக் கொண்டனர். மேலும் அந்த குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். அவர்கள் கொடுத்த முகவரியை வைத்து சேலத்தில் பாண்டியனின் தாயார் பச்சையம்மாள் இருந்த ஹரிஷை காவல் துறையினர் மீட்டனர்.

திருச்செந்தூர் குழந்தை கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; கைதாகி உயிரிழந்த பெண் தற்கொலை செய்தது அம்பலம்

இதனிடையே கைது செய்யப்பட்ட பாண்டியன் மற்றும் திலகவதி ஆகியோரை ஆலாந்துறை காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு திலகவதியை அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த காவல் துறையினர் திலகவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திலகவதியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிவில் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். குழந்தை கடத்தல் வழக்கில் கைதான பெண் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த திலகவதியின் உடலை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் நேரில் பார்வையிட்டார். பின்னர் நீதிபதி முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றது. இதில் திலகவதி விஷத்தன்மை வாய்ந்த பவுடர் போன்ற பொடி ஒன்றை சாப்பிட்டு உயிரிழந்து இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலில் மேலும் ஒரு பாக்கெட் விஷத்தன்மை வாய்ந்த பொடி இருப்பதும் தெரியவந்த நிலையில், அதனை இராசயன பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே உயிரிழந்த திலகவதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திலகவதியின் காவல் நிலையத்தில் விஷ பொடியை சாப்பிட்டாரா அல்லது வேறு எங்கு அதனை உட்கொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Embed widget