மேலும் அறிய

தீபாவளி பரிசாக ராயல் என்பீல்டு பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளர் ; ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

பணியில் இருந்தவர்களை கலந்தாய்வுக் கூட்டம் என சிவக்குமார் பொன்னுசாமி அழைத்து, ஒவ்வொருவர் கையிலும் ராயல் என்பீல்டு சாவியை கொடுத்துள்ளார். இதனை எதிர்பாராத ஊழியர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றன. ஆண்டுதோறும் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை, இனிப்பு, கார வகைகளுடன் பட்டாசு, புதிய ஆடைகளை உள்ளிட்டவற்றை பல நிறுவனங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ஒரு எஸ்டேட் உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு ராயல் என்பீல்டு வாகனங்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சிக்கு தந்துள்ளார்.

தீபாவளி பரிசாக ராயல் என்பீல்டு பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளர் ; ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. அதேபோல தேயிலை உற்பத்தியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ள நிலையில், தேயிலை சார்ந்த தொழில்கள் அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதரமாக தேயிலை தொழில் இருந்து வருகிறது. கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி பகுதியில் சிவக்குமார் பொன்னுசாமி என்ற தொழிலதிபருக்கு சொந்தமான சிவகாமி எஸ்டேட் என்ற தேயிலை தோட்டம் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் பொன்னுசாமி, கடந்த 20 ஆண்டுகளாக கீழ்-கோத்தகிரி பகுதியில் தேயிலை சாகுபடி, காளான் தயாரிப்பு, கொய்மலர் சாகுபடி, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறார்.

தீபாவளி பரிசாக ராயல் என்பீல்டு பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளர் ; ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

இதனிடையே ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தனது ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை பரிசளித்து இன்ப அதிர்ச்சி அளித்து வரும் சிவக்குமார் பொன்னுசாமி, ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித போனஸ் தொகையும் வழங்கி வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவருடைய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ராயல் என்பீல்டு இரு சக்கர வாகனங்களை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளார். அதேசமயம் இது குறித்து ஊழியர்களிடம் எதுவும் கூறாத சிவக்குமார் பொன்னுசாமி பணியில் இருந்தவர்களை கலந்தாய்வுக் கூட்டம் என அழைத்து, ஒவ்வொருவர் கையிலும் ராயல் என்பீல்டு சாவியை கொடுத்துள்ளார். எதிர்பாராத இந்த பரிசைப் பெற்ற ஊழியர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அப்போது ஊழியர்கள் உடன் உரையாடி சிவக்குமார், ஊழியர்களுடன் சேர்ந்து ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி ரைட் சென்றார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்து போன ஊழியர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

தீபாவளி பரிசாக ராயல் என்பீல்டு பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளர் ; ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

அப்போது ஊழியர்கள் இடையே பேசிய சிவக்குமார் பொன்னுசாமி கூறுகையில், ”இந்தளவு இந்த நிறுவனம் வளர அனைவரின் கடின உழைப்பும் தான் காரணம். நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு கொடுத்துள்ளேன். பணி என்பது முக்கியம் தான். அதைவிட குடும்பம் மிக முக்கியம். எனபே குடும்பத்திற்காக அதிக நேரத்தை ஒதுக்குங்கள்” எனத் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் வழங்கும் தீபாவளி போனஸ் போல் இந்த ஆண்டும் தங்கள் நிறுவனம் ஊக்கத்தொகை வழங்குவார்கள் என எதிர்பார்த்தாகவும், ஆனால் விலை உயர்ந்த ராயல் என்பீல்ட் பைக்கை முதலாளி பரிசாக வழங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். தீபாவளி பரிசாக ராயல் என்பீல்ட் பைக் வழங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி
Madhampatti Rangaraj :கர்ப்பமாக்கி கைவிட்ட ரங்கராஜ்!''ஜாய் க்ரிஷில்டா பகீர் புகார்
Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
USA Tariff: ”அமெரிக்கா ப்ராண்ட் டாய்லெட்ல இருக்கு” இந்தியாவை சீனா பக்கம் தள்ளிட்டீங்க ட்ரம்ப் - முன்னாள் அதிகாரி
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ.45 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்து கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு குட் நியூஸ்! பெட்டிகள் அதிகரிப்பு, டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!
பொழப்பில் மண்ணை அள்ளிப்போட்ட ட்ரம்ப்.. தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் இதுதான்!
பொழப்பில் மண்ணை அள்ளிப்போட்ட ட்ரம்ப்.. தமிழ்நாட்டில் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் இதுதான்!
விதை நெல், உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விதை நெல், உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்... குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
யமஹானாலே அசத்தல்.. ஸ்டைல், கிளாஸ், மாஸ் காட்டும் Yamaha Ray ZR 125 - என்ன ஸ்பெஷல்?
யமஹானாலே அசத்தல்.. ஸ்டைல், கிளாஸ், மாஸ் காட்டும் Yamaha Ray ZR 125 - என்ன ஸ்பெஷல்?
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! விமான நிலையம்போல் எடை கட்டுப்பாடு: இனி லக்கேஜ் கறார்!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! விமான நிலையம்போல் எடை கட்டுப்பாடு: இனி லக்கேஜ் கறார்!
Embed widget