மேலும் அறிய

அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனம்...மூட நடவடிக்கை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன் துவக்கி வைத்து உரையாற்றினார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார். 

தஞ்சாவூர்: அனுமதியின்றி செயல்படும் தண்ணீர் ஆலையை மூட வேண்டும் என தஞ்சை மாநகராட்சி 47 வது வார்டு பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர் 47வது வார்டு பகுதி மக்கள்  சார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மூன்றாவது வாயில் முன்பு அனுமதி இன்றி செயல்பட்டு வரும் தண்ணீர் ஆலையை இழுத்து மூட மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர செயலாளர் எஸ்.அபுசாலிக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன் துவக்கி வைத்து உரையாற்றினார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி 47 வது வார்டு பகுதியில் முல்லை நகர், விசாலாட்சி நகர்,குமார் போஸ்டல் காலனி, ரத்னா நகர், பாரதிநகர், உப்பரிகை உள்ளிட்ட நகர்கள் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் நிலத்தடி நீரை நம்பியும், மாநகராட்சி வழங்குகின்ற குடிநீரை பயன்படுத்தியும் தங்கள் வாழ்க்கை தேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள முல்லை தெருவில் பியூரி பையிங் என்ற தனியார் கம்பெனி  ஆழ்துளை போர்வெல் அமைத்து தண்ணீரை தினந்தோறும் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்து குடிநீர் விற்பனை செய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள அனைத்து தெருவிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து,அவரவர்கள் வீடுகளில் உள்ள போர் தண்ணீர் எடுக்க முடியவில்லை. மாநகராட்சி வழங்குகின்ற குடிநீரும் இப்பகுதி மக்களின் தேவையை போக்கவில்லை.

எனவே சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி செயல்படுகின்ற தனியார் தண்ணீர் ஆலையை  மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக தண்ணீர் கம்பெனி ஆலையை இழுத்து மூட வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்சிவக்குமார், செல்வசுப்பிரமணி, மகேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ராமநாதபுரம் ஊராட்சி நிர்வாகி அபிப்ரஹ்மான், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட பொருளாளர் லட்சுமணன்,  ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சாமிநாதன்,  மாரிமுத்து , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணி செயலாளர் சுப்பராயன், வன துர்கா நகர் திமுக பிரதிநிதி மகேந்திரன், 47 வது வார்டு  கார்த்திகேயன், தமிழ் தேசிய முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் விசிக நிர்வாகி சுரேஷ், 47 வது வார்டு தொமுச பிரதிநிதி ஜோசப், 47 வது வார்டு பகுதி நிர்வாகிகள் சையது முகமது, இப்ராஹிம், ரஜாக்,ஆதாம் முகமது சுந்தர்,கிருஷ்ணராஜ், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சசிகலா, 47வது வார்டு பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் சவுரியம்மாள், ஜெய்சிராணி, சாமியம்மாள் புஷ்பவல்லி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget