மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

”வெள்ளியங்கிரி - மருதமலை யானை வழித்தட பரிந்துரையை ஏற்கக்கூடாது”- விவசாயிகள் போராட்டம்

கள ஆய்வும், மக்களின் கலந்தாலோசனையும் இன்றி ஒரு தலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டுள்ள யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

யானைகளின் பெயரை கூறி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிப்பதாக கூறி வனத்துறைக்கு தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்

பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ளதாக கூறி, தமிழக வனத் துறைக்கு தொண்டாமுத்தூர் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  புதிய யானை வழித்தடம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டாமுத்தூர் விவசாயிகள்  பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு, இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

யானை வழித்தடம்:

அப்போது  அங்கு திரண்டிருந்த விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  தமிழக வனத்துறை தமிழ்நாட்டில் புதிதாக 42 யானை வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக ஒரு செய்தி சில தினங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து, தமிழக வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த அந்த வரைவு அறிக்கையை நாங்கள் படித்து பார்த்தோம். அந்த அறிக்கையில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் எங்களுடைய விவசாய உறுப்பினர்களின் விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத் துறை மேற்கொண்ட போது எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை.”தலைமுறைகளாக விவசாயம்”இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை.

”வெள்ளியங்கிரி - மருதமலை யானை வழித்தட பரிந்துரையை ஏற்கக்கூடாது”- விவசாயிகள் போராட்டம்

இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களை கொண்டு ஒரு தலைப்பட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்து இருப்பது வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில், எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை.

”பயிர்களை நாசம் செய்கிறது”

சமீப ஆண்டுகளாக யானைகள் ஊருக்குள் வருவது தொடர்பாக செய்திகள் வெளிவருவதற்கு காரணம், வனத்துறையின் நிர்வாக சீர்கேட்டால் தான். யானைகளுக்கு தேவையான உணவுப் பயிர்களை வனப்பகுதிகளுக்குள் பயிர் செய்யாமல் தேக்கு, புளியமரம், ஈட்டி போன்ற மரங்கள் ஏக்கர் கணக்கில் வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் வன விலங்குகளுக்கு தேவையான அளவு தண்ணீர் வசதியையும் வனத்துறை உருவாக்கவில்லை. இதன் காரணமாக தான் யானைகள் வனப்பகுதியை விட்டு எங்களுடைய விவசாய நிலத்திற்கு வந்து எங்கள் பயிர்களை நாசம் செய்கிறது.  எனவே இப்போது யானைகளின் பெயரை கூறி எங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் பறிப்பதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது.

 மனித உரிமை மீறும் செயல்:

தொடர்ந்து காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை யானை வழித்தடம் என பரிந்துரைத்து இருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது மனித உரிமைகளை மீறும் செயலாகும். அத்துடன், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை கோவில், அனுவாவி கோவில், பண்ணாரி கோவில், பொன்னூத்து அம்மன் கோவில் என பல கோவில்கள் அமைந்துள்ள பகுதிகள் யானை வழித்தடப் பகுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது எங்களுடைய வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகவும் கருதுகிறோம்.  எனவே, எவ்வித முறையான கள ஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள ‘வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் - மருதமலை’ யானை வழித்தட பரிந்துரையை தமிழக அரசு ஏற்று கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNSET 2024: மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு; மனோன்மணியம் பல்கலை. அறிவிப்பு- என்ன காரணம்?
TNSET 2024: மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு; மனோன்மணியம் பல்கலை. அறிவிப்பு- என்ன காரணம்?
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
Latest Gold Silver Rate: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.54,000 கடந்து விற்பனை..
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.54,000 கடந்து விற்பனை..
Special FD: பொதுத்துறை வங்கியின் சிறப்புத் திட்டம் - '666 நாட்களில்' அற்புதமான வருமானம், விவரம் உள்ளே..!
Special FD: பொதுத்துறை வங்கியின் சிறப்புத் திட்டம் - '666 நாட்களில்' அற்புதமான வருமானம், விவரம் உள்ளே..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Naveen Patnaik vs Modi : மோடி பக்கா ஸ்கெட்ச்..நவீனுக்கு முற்றுப்புள்ளி!உதவிய VK பாண்டியன்?BJP Cadre Tonsure : ’’அண்ணாமலை தோத்தா மொட்டை!’’ சபதத்தை நிறைவேற்றிய பாஜககாரர்!PM Modi vs I.N.D.I.A Alliance : மோடிக்கு எதிராக ஸ்கெட்ச்..ராகுல் எடுத்த முக்கிய முடிவு!Rajinikanth about Mk Stalin  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNSET 2024: மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு; மனோன்மணியம் பல்கலை. அறிவிப்பு- என்ன காரணம்?
TNSET 2024: மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு; மனோன்மணியம் பல்கலை. அறிவிப்பு- என்ன காரணம்?
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
Breaking News LIVE: எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏன்? - மாநில வாரியாக பாஜக ஆலோசனை!
Latest Gold Silver Rate: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.54,000 கடந்து விற்பனை..
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.54,000 கடந்து விற்பனை..
Special FD: பொதுத்துறை வங்கியின் சிறப்புத் திட்டம் - '666 நாட்களில்' அற்புதமான வருமானம், விவரம் உள்ளே..!
Special FD: பொதுத்துறை வங்கியின் சிறப்புத் திட்டம் - '666 நாட்களில்' அற்புதமான வருமானம், விவரம் உள்ளே..!
NDA Alliance: பாஜகவிற்கு லாக் - ”பிரியும் இலாக்காக்கள்” சந்திரபாபு -6,  நிதிஷ்குமார் - 5, குமாரசுவாமி, சிராக் பஸ்வான்?
NDA Alliance: பாஜகவிற்கு லாக் - ”பிரியும் இலாக்காக்கள்” சந்திரபாபு -6, நிதிஷ்குமார் - 5, குமாரசுவாமி, சிராக் பஸ்வான்?
Raul Gandhi: ஆட்சி வேண்டாம்..! எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி - I.N.D.I.A. கூட்டணி ஆலோசனை
Raul Gandhi: ஆட்சி வேண்டாம்..! எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி - I.N.D.I.A. கூட்டணி ஆலோசனை
AIADMK: தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம் - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஓபிஎஸ்!
தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம் - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஓபிஎஸ்!
Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!
Sukra Dasai: சுக்கிர தசை தரும் 9 புத்திகளின் பலன்கள் என்னென்ன? - வாங்க பார்க்கலாம்!
Embed widget