மேலும் அறிய

’ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் லியோ படத்திற்கு அழுத்தம் தரப்பட்டது’ - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு

"புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும், அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது."

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தடைந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு மதம் சார்ந்த படங்கள் வைக்கக்கூடாது என திருப்பூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசு அதிகாரிகள் இப்படி பேசினால் தான் இந்த அரசுக்கு பிடிக்கும் என பேச ஆரம்பித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக மதம் சார்ந்த உணர்வுகளை ஒதுக்கி தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழக அரசு இதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி ஒரு தலைபட்சமாக நடந்து கொள்பவர்கள் மீது பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு தலைபட்சமாக எப்போதும் மத உணர்வுகளை புண்படுத்திக் கொண்டிருப்பது என்பது சரியில்லை. 

லியோ திரைப்பட விவகாரம் பெரிதாகி வருகிறது. என்னை பொருத்தவரை அனைவருக்கும் ஆன பொதுவான நடைமுறைகள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நபர்களுக்கான நடைமுறைகளாக இருக்கக் கூடாது. எந்த நடிகர்கள் நடித்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தாலும், ஒரே மாதிரியான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் 7 மணிக்கு அனுமதி அளித்த பின்பும், அழுத்தம் காரணமாக ஒன்பது மணிக்கு தான் திரையிட முடிந்தது.  இந்த அழுத்தம் ரெட் ஜெயிண்ட் எனும் தூய தமிழில் நடந்து கொண்டிருக்கும் நிறுவனத்தால் தான் பிரச்சனை என நிர்வாகத்தினர் கூறுகின்றனர். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என கூறுகின்றனர் அப்படி நான் சினிமாவை சினிமா என்றுதானே பார்க்க வேண்டும் சுதந்திரமான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதை நான் கூறுகிறேன்.

ஜெய் ஸ்ரீ ராம் எனக் கூறியதால் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் எதுவும் கூற வேண்டாம் என கூறவில்லை. வெற்றியின் வெளிப்பாடாக உற்சாகத்தோடு இறைவன் தான், அந்த வெற்றியை கொடுத்தார் என்பதை சொல்லும் போது தப்பில்லை. ஆதீனங்கள் காலம் காலமாக தமிழோடு ஆன்மீகத்தை வளர்த்தவர்கள் அவர்கள் ஒன்று சொன்னால் அரசாங்கம் அதை நிச்சயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மற்ற மதங்களை மற்ற பிரச்சனைகளையோ சொல்லும் போது அரசாங்கம் உடனடியாக கவனத்தை செலுத்துகிறது. ஆனால் இந்து மதம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் கவனம் கொடுப்பதில்லை. ஆதீனங்கள் சொல்கிறார்கள் என்றால் அதில் உண்மை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் எனது வேண்டுகோள். சென்னி மலையில் மக்கள் எந்த அளவிற்கு திரண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். மேல்மருவத்தூரிலும் இதே போல் ஒரு பிரச்சனை வந்தது. அவரவர்கள் நம்பிக்கையை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை புண்படுத்துவதிலும் மற்றவர்களின் நம்பிக்கையில் அவர்கள் உள் புகுவதும் தவறு என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா கூட்டணியின் மகளிர் மாநாட்டில் சோனியா காந்தி தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞர், அண்ணாதுரை அவர்களின் நேரத்தில்தான் பெண்களுக்கான சம உரிமை கொடுக்கப்பட்டது என கருத்தை கூறியுள்ளார். அதற்கு முன்னால் இருந்த காமராஜரை முற்றிலுமாக மறந்துள்ளார். காமராஜர் படிப்பறிவை கொடுத்ததால் தான் பெண்களுக்கு நிச்சயமான ஒரு புரிதலும் ஒரு பக்க பலமும் மேன்மையும் வந்தது. சாமானிய பெண்களுக்கான மாநாடு என சொல்லிவிட்டு, அதில் இருந்தவர்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகளாகவே இருந்தனர். சாதாரண பெண்கள் தலைவர்கள் என யாரும் இல்லை. மிக தவறான அவநம்பிக்கையை மகளிர் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள். மகளிர் இட ஒதுக்கீடு இப்போது வராது என கூறுவது தவறு. அனைத்து கட்சியைச் சார்ந்த மகளிர் 33 சதவீத மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி கூற வேண்டும். இதனை கனிமொழி போன்றவர்கள் கூட கண்துடைப்பு என கூறுவது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

நான் மட்டுமல்ல பாரதப் பிரதமரும் காமராஜரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் கருப்பு பண ஒழிப்பிற்கு என்னை பாராட்டிருப்பார் என பிரதமர் கூறியுள்ளார். எனவே ஊழலற்ற தன்மை முன்னேற்றத்திற்கு உதாரணமாக காமராஜரை எடுத்துக் கொள்வோம். பெட்டி பெட்டியாக பணம் எடுத்த பின்பு பழிவாங்கும் நடவடிக்கை என கூறுகின்றனர். இது அனைத்தும் மக்களின் பணம் இதை பழிவாங்குகிறது என சொன்னால் மக்கள் நம்ப மாட்டர்கள். காவிரி விவகாரத்தை பொருத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த துணிச்சல் ஆளும் கட்சியாக வந்த பின்பு முதல்வர் ஸ்டாலினிடம் காணாமல் போய்விட்டது. இஸ்ரேலில் இருந்து பெரும் போர் சூழலில் இருந்து இந்தியர்களும் தமிழர்களும் வந்துள்ளார்கள் என்பது பிரதமருக்கு அயல் நாடுகளில் எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதும், அதன் காரணமாகத்தான் இந்தியர்களை பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் உலகில் எந்த பகுதியில் பிரச்சனைக்கு பிரச்சினையில் இருந்தாலும் அவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டு வரும். தமிழகத்தைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரண குடிமகள். எனவே அனைத்து விஷயங்களிலும் கருத்து கூறுவது உரிமை எனக்கு உண்டு” எனத் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget