மேலும் அறிய

’கோவையில் கொரோனா மூன்றாவது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு’ – எச்சரிக்கும் கண்காணிப்பு அலுவலர்

மூன்றாவது அலை ஓரே மாதத்தில் கூட வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. - சித்திக்

கோவையில் கொரோனா மூன்றாவது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க  வாய்ப்புண்டு எனவும், இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சித்திக் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான  சித்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்திக், “கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் மக்களுக்கு கொரொனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கின்றது. சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி  78 சதவீதமாக இருக்கின்றது. எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால், கோவையில கொரோனா மூன்றாவது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க  வாய்ப்புண்டு. இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் கூட மூன்றாவது அலை வர வாய்ப்புண்டு.

முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தற்போது முழு ஊரடங்கு இல்லாமல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இதை தொடர்ந்தால் முழு ஊரடங்கை தள்ளிவைக்கவும்,  தவிர்க்கவும் வாய்ப்புண்டு. கோவையில் தற்போது எதிர்ப்பு சக்தி  43 சதவீதமாக இருக்கும் நிலையில் இதை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே வழி. கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 வது அலை ஓரே மாதத்தில் கூட வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் எல்லா மாவட்டங்களிலும் பாதிப்பு வர வாய்ப்பு குறைவு. அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் படுக்கை, வென்டிலேட்டர்கள் இருகின்றது. ஒரு வாரத்தில் படுக்கைகளை உயர்த்தி கொள்ள முடியும். ஆக்ஸிஜன் டேங்க் ஓன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றது.

கோவையில் முன் தயாரிப்புகள்   இருப்பதால், நிறைய உயிர் சேதம் இல்லாமல் 3 வது அலையை  நம்மால் எதிர் கொள்ள முடியும் எனவும், அடுத்த 2 மாதங்களுக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம். அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகளும் தயாராக இருக்கின்றது. இ.எஸ்.ஐ மருதரதுவமனையில் 40 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 30 ஐ.சி.யு படுக்கைகளும் குழந்தைகளுக்கு தயாராக இருக்கின்றது. மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவர்களும் கோவையில்  இருக்கின்றனர்” என அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget